மேலும் அறிய

Madurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

காவலர் மலையரசன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் காவல்துறையினர்  சுட்டுப்பிடித்தனர். ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது, சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பாண்டிச் செல்வி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்துள்ளார். கடந்த  சில நாட்களுக்கு முன் பைக் விபத்தில் பாண்டிச் செல்வி உயிரிழந்தார். இந்த சூழலில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில், மலையரசனை காணவில்லை என உறவினர்கள் தேடிவந்தனர்.

இதனையடுத்து அவர் எங்கு சென்றார்.? என்பது தெரியாத நிலையில், தனிப்படை காவலரான மலையரசனின் நிலைகுறித்து தெரிந்துள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் காவலர் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மலையரசன் கொலை செய்யப்பட்டாரா.? தற்கொலையா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில் காவலர் மலையரசன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் வில்லாபுரத்தை சேர்ந்த மூவேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுனரை துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். பணத்திற்காக எரித்துகொன்றதாக ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

காவலர் மலையரசனுக்கும் - ஆட்டோ ஓட்டுநர் மலையரசனுக்கும், நட்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஆட்டோவில் காவலர் சவாரி சென்றபோது, ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் சேர்ந்து பெருங்குடி அருகே பைபாஸ் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது காவலர் மலையரசனிடம் பணத்தை பறித்த போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரை தலையில் பலமாக அடித்து ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்துவிட்டு, பின்னர் எரித்து பெருங்குடி அருகே வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பிவிடும் என்றபோது மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து மூவேந்தர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
Holidays: வரட்டா மாமே டுர்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! காலியாகும் பெருநகரங்கள்!
Holidays: வரட்டா மாமே டுர்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! காலியாகும் பெருநகரங்கள்!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
பொதுவெளி மட்டுமல்ல, வீட்டிலும் பாதுகாப்பில்லையா? சிறுமி மாயம் குறித்து சி.வி.சண்முகம் வேதனை!
பொதுவெளி மட்டுமல்ல, வீட்டிலும் பாதுகாப்பில்லையா? சிறுமி மாயம் குறித்து சி.வி.சண்முகம் வேதனை!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
Embed widget