'வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்...' ஆசை வார்த்தை நம்பி பணத்தை இழந்த மக்கள்
புதுச்சேரியில் பகுதி நேர வேலையாக ஆன்லைன் முதலீடு செய்து ரூபாய் 11 லட்சத்தை இழந்த 8 பேர்.

புதுச்சேரி: பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து வில்லியனுார் நபர் மோசடி கும்பலிடம் ரூ.11.42 லட்சம் இழந்துள்ளார்.
வில்லியனுாரை சேர்ந்தவர் இஸ்மத் நாச்சியார். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
அதைநம்பிய, இஸ்மத் பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 42 ஆயிரத்து 736 முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது.
லாஸ்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கி அதிகாரி போல் பேசி, வங்கி கணக்கிற்கான KYC கே.ஓய்.சி.யை புதுப்பிக்கும்படி கூறியுள்ளார். அதற்கான லிங்க் ஒன்றையும் சீனிவாசனுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, சீனிவாசன் அந்த லிங்கை பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 6000 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.
இதேபோல், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி 72 ஆயிரத்து 800, கோரிமேட்டைச் சேர்ந்த ஜெகஜீவன் 1 லட்சத்து 63 ஆயிரத்து 300, முத்தியால்பேட்டைச் சேர்ந்த சரவணகுமார் 5 ஆயிரம், பெரியார் நகரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா 25 ஆயிரம், கோரிமேட்டை சேர்ந்த இருதயராஜ் சார்லஸ் 19 ஆயிரத்து 700, அரியாங்குப்பத்தை சேர்ந்த முத்து மணிக்கம் 3 ஆயிரம் என மொத்தம் 8 பேர் மோசடி கும்பலிடம் 19 லட்சத்து 37 ஆயிரத்து 536 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் குற்றங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள் : சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கையில், தெரியாத எண்களில் இருந்து தொடர்பு கொண்டு otp எண்கள் கேட்டால் பகிரக்கூடாது தெரியாத லிங்குகளை கிளிக் செய்து பார்க்கக் கூடாது விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அதேபோல் பார்ட் டைம் ஜாப் என்றும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்ன ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
சைபர் கிரைம் தாக்குதல்கள்:
கணினி அல்லது நெட்வொர்க்கை சேதப்படுத்தி, தகவல்களை திருடி, பணத்தை மோசடி செய்ய சைபர் குற்றவாளிகள் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
தனிப்பட்ட தகவல்களை திருடுதல்:
தனிப்பட்ட தகவல்களை திருடி, அடையாள மோசடி, கடன் மோசடி, அல்லது பணம் மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது.
பண மோசடி:
ஆன்லைன் வர்த்தகம் மூலம் பணம் மோசடி செய்தல், ஆன்லைன் வங்கி கணக்கு மோசடி, அல்லது ஃபைஷிங் போன்ற மோசடி மூலம் பணத்தை திருடுவது.
குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் (CSAM):
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை இணையத்தில் பரப்புவது அல்லது பகிர்வது.
இலக்கணம் இல்லாத சாஃப்ட்வேர்:
சட்டப்பூர்வமற்ற சாஃப்ட்வேர்களை இணையத்தில் பதிவேற்றுவது, பகிர்தல், அல்லது பயன்படுத்துவது.
கள்ளத்தனமான பொருட்கள்:
கள்ளத்தனமான பொருட்கள், மருந்துகள் அல்லது பிற பொருள்கள் போன்றவற்றை ஆன்லைனில் விற்று மோசடி செய்வது.
ஹேக்கிங்:
கணினி மற்றும் நெட்வொர்க்குகளின் பாதுகாப்பு அமைப்புகளை மீறி சேதப்படுத்துவது

