![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஒரு முறை பிரீமியம்... ஆயுள் முழுவதும் பென்சன்... எல்ஐசி அசத்தல் திட்டம்!
வாழ்வில் வயதானலும் தங்களுடைய சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சரல் பென்சன் திட்டம் நிச்சயம் பாதுகாப்பானதாக அமையும்.
![ஒரு முறை பிரீமியம்... ஆயுள் முழுவதும் பென்சன்... எல்ஐசி அசத்தல் திட்டம்! LIC's Pay the premium once-You can get the pension for the life time ஒரு முறை பிரீமியம்... ஆயுள் முழுவதும் பென்சன்... எல்ஐசி அசத்தல் திட்டம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/4b03c4894b007833ee828eb4ae93e8a5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நம்முடைய வாழ்வில் பாதுகாப்பான முதலீடு மற்றும் இன்சுரன்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசிதான். இப்படி மக்களிடம் பல்வேறு வகைகளில் பிரபலமடைந்து எல்ஐசி கடந்த ஜுலை மாதம் முதல் சரல் பென்சன் திட்டம் என்ற ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும், ஆயுள் முழுவதும் நம்மால் 40 வயதில் இருந்தே ஓய்வூதியம் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பென்சன் திட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சரல் யோஜனா திட்டம் அனைவரும் பென்சன் வழங்கக்கூடிய நல்ல திட்டமாக உள்ளது. எனவே இதில் வேறு என்ன பயன்கள்? யாரெல்லாம் இந்த பாலிசிதாரர்களுக்கு தகுதியுடையவர்கள் என தெரிந்துக்கொள்வோம்.
சாரல் பென்சன் திட்டத்தை தொடங்குவதற்கான வழிமுறைகள்:
இந்த பாலிசியினை 40 வயது முதல் 80 வயது வரை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலிசியினைத் தேர்தெடுக்கும் நபர்கள் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும், வாழ்நாள் முழுவதும் ஒரு வருமானத்தை உங்களால் பெற முடியும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 12 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமீயம் தொகை செலுத்த வேண்டும். குறிப்பாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 ஆயிரம் தொகை செலுத்தினால் மாதம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த ஓய்வூதிய திட்டத்தை சிங்கிள் லைப் (Single Life மற்றும் ஜாயின்ட் லைப் என்ற இருவழிகளில் பெறலாம். குறிப்பாக சிங்கிள் லைப் இன்சுரன்ஸ் பாலிசியை யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர் உயிருடன் இருக்கும் வரை, தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தைப் பெற முடியும். ஒரு வேளை அவர் இறந்தப் பிறகு அடிப்படை பிரீமியம் தொகை யார் நாமினியோ அவருக்கு திருப்பித் தரப்படும்.
இதனையடுத்து 2 வதாக ஜாயிண்ட் லைப் (Joint Life) இன்சுரன்ஸ் பாலிசி. கணவன், மனைவி இருவருக்கும் இத்திட்டம் கவரேஜ் ஆகிறது. இதில் கணவன் அல்லது மனைவி யார் முதன்மை ஓய்வூதியதாரர்கள் என பாலிசியைத் தொடங்குகிறார்களோ அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, தொடர்ந்து ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். அவர் இறந்த பிறகு, அவரது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். பின்னர் இருவரும் இறந்த நிலையில் அடிப்படை பிரீமியம் அவருடைய நாமினிக்கு ஒப்படைக்கப்படும்.
பாலிசிதாரர்களுக்கு எப்போது பாலிசி தொகை கிடைக்கும்?
சாரல் பென்சன் திட்டத்தின் மூலம் பாலிசிதாரர்கள் 4 ஆப்சேன்களைத் தேர்வு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதம், 3 மாதங்களுக்கு ஒரு முறை, 6 மாதங்களுக்கு ஒரு முறை பென்சன் பெறலாம் அல்லது 12 மாதங்களில் ஒரு முறை என ஓய்வூதியம் பெறமுடியும்.
பென்சன் பாலிசியில் கடன் பெறும் வசதி உள்ளதா?
எல்ஐசியில் உள்ள மற்ற அனைத்து பாலிசிகளைப்போலவே இத்திட்டத்திலும் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு, அவசரத்தேவை போன்ற பலவற்றிற்கு பாலிசி தொடங்கிய 6 மாதங்களில் இருந்தே நீங்கள் கடன் பெற முடியும். வாழ்வில் வயதானலும் தங்களுடைய சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சரல் பென்சன் திட்டம் நிச்சயம் பாதுகாப்பானதாக அமையும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)