மேலும் அறிய
Salaar Postponed : சலார் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. ஷாக்கான பிரபாஸ் ரசிகர்கள்!
Salaar Postponed : செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவிருந்த சலார் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சலார் பிரபாஸ்
1/6

கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பிறகு, பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்க தொடங்கினார் பிரசாந்த் நீல்.
2/6

இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதை பார்க்கும் போது பலருக்கும் கே.ஜி.எஃப் படம் நினைவுக்கு வந்தது. இருப்பினும் அது பல லட்ச பார்வைகளை பெற்று ட்ரெண்டானது.
3/6

சலாருக்கும் கேஜிஎஃப் படத்திற்கும் சம்பந்தம் உள்ளது எனவும் சில தகவல்கள் பரவிவந்தது.
4/6

அதுமட்டுமின்றி தொடர் ப்ளாப் படங்களை கொடுக்கும் பிரபாஸிற்கு இது கம்-பேக்காக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
5/6

இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு முன்னதாக வந்தது.
6/6

தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. “சலார் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. சில காரணங்களால், படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கிறோம். நல்லதொரு சினிமா அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். தரமான படத்திற்காக எங்களின் குழு அயராது உழைத்து வருகிறது. புதிய ரிலீஸ் தேதியை கூடிய விரைவில் அறிவிப்போம். சலார் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் வரை காத்திருங்கள். எங்களின் பயணத்தில் நீங்கள் பங்குபெற்றதற்காக நன்றி.” என தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் பதிவிட்டுள்ளது.
Published at : 13 Sep 2023 10:23 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement