மேலும் அறிய
Post Office Schemes : பணம் சேமிக்கும் திட்டமிருக்கா? போஸ்ட் ஆஃபிஸில் ஈசியா சேர்க்கலாம்!
Post Office Schemes: குறைந்த வரியுடன் வருவாய் ஈட்ட உதவும், அஞ்சல் அலுவலகங்களில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்
1/6

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB) - தனிநபர் / கூட்டுக் கணக்குகளில் ஆண்டுக்கு 4.0 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்ய வேண்டும்.ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்
2/6

ரெகரிங் டெபாசிட் திட்டம் - RD - தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது (காலாண்டிற்கு கூட்டு வட்டி). மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்12 தவணைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, உங்கள் கணக்கில் இருக்கும் வைப்புத் தொகையில் 50% வரை கடனைப் பெறலாம்.
3/6

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD):- குறைந்த பட்சம் 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.கணக்கை 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடங்கள் விகிதத்தில் தொடரலாம்.5 வருட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
4/6

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு (MIS) -குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் ஆக உள்ளது. அதிகபட்ச முதலீட்டு வரம்பாக தனிநபர் கணக்கிற்கு ரூ. 9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5/6

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) -குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பாக ஒரு தனிநபர் கணக்கிற்கு ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது
6/6

5 வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் -வட்டி விகிதம் ஆண்டுதோறும் 7.7 சதவிகிதம் கூட்டு வட்டியாக வழங்கப்படுகிறது.திட்டத்தின் முடிவின்போது மட்டுமே தொகை பயனாளருக்கு வழங்கப்படும் குறைந்தபட்சம் ரூ. 1000 முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு இல்லை.வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம்
Published at : 22 May 2024 11:22 AM (IST)
Tags :
Financeமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion