Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!
வெள்ள பாதிப்பால் கடும் ஆத்திரத்தில் உள்ள விழுப்புரம் மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது விழுப்புரம் காவல் ஆய்வாளர் கெத்து காட்டும் விதமாக கேஸ் போட்டு விடுவேன், பிரச்சனையை திசை திருப்பி விடுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் வீடுகளிலும் விளைநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன. இன்னும் வெள்ள நீர் ஊர்களை சூழ்ந்துள்ளதால் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் சூழலும் இருக்கிறது. அதனால் உணவு தண்ணீர் கேட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு வீடு கால்நடைகள் என இழந்துள்ளனர். இந்நிலையில் உணவு குடிநீர் ஏதும் வழங்கவில்லை எனக் கூறி சட்டமன்ற உறுப்பினர் யாரும் வந்து எங்களை பார்க்கவில்லை என்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது வாகனங்களுக்கு வழி விடுங்க என்ற போது அங்கு இருந்தவர்கள் ஆத்திரத்தில் பேருந்தை மறித்தனர். இதற்கு விழுப்புரம் காவல் ஆய்வாளர் கெத்து காட்டும் விதமாக கேஸ் போட்டு விடுவேன், பிரச்சனையை திசை திருப்பி விடுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒருமையில் பேசி பிரச்சனையை பெரிதாக்கியதால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.