IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணாவை அஸ்வின் தனது சாமர்த்தியத்தால் அவுட்டாக்கினார்.

சென்னை - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. 2 போட்டிகளில் ஆடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றிக்காக களமிறங்கியுள்ளது.
சிக்ஸர் மழை பொழிந்த ராணா:
தொடக்க வீரர் ஜெய்ஸ்டால் 4 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த நிதிஷ் ராணா களமிறங்கியது முதலே அடித்து ஆடினார். இதனால், ராஜஸ்தான் ரன் மளமளவென ஏறியது. மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்த சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்களில் அவுட்டானார். இதன்பின்பு, கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார்.
ரியான் பராக்கை மறுமுனையில் வைத்துக்கொண்டு நிதிஷ் ராணா அதிரடி காட்டினார். கலீல் அகமது, ஓவர்டன், அஸ்வின், பதிரானா என யார் வீசினாலும் விளாசினார். பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய அவர் அதிரடியாக அரைசதம் விளாசினார். அரைசதம் கடந்த பிறகும் தொடர்ந்து ரன் வேட்டை நடத்தினார். குறிப்பாக, அஸ்வின் பந்தில் ரன்மழை பொழிந்தார். அஸ்வின் பந்தில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார்.
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஸ்வின்:
சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ராணாவை, அஸ்வினே தனது சுழலுக்கு இரையாக்கினார். அஸ்வின் வீசிய ஓவரில் பவுண்டரிகளாக விளாசிய ராணா அவரது பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க முயற்சிக்க, அந்த பந்தை ஒயிட் போல வீசினார். இதனால், ராணாவால் அந்த பந்தை அடிக்க இயலவில்லை. இதையடுத்து, விக்கெட் கீப்பர் தோனி அவரை ஸ்டம்பிங் செய்தார். இதையடுத்து சென்னை அணி நிம்மதி பெருமூச்சு விட்டது.
நிதிஷ் ராணா நிதிஷ் ராணா 36 பந்துகளில் 10 பவுண்டரி 5 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது அதிரடியான பேட்டிங்கால் ராஜஸ்தானின் ரன்ரேட் 10 ஆக தொடர்ந்து நீடித்தது. கடந்த 2 போட்டியில் சிறப்பாக ஆடாத நிதிஷ் ராணா இந்த போட்டியில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
கவுகாத்தியில் நடந்து வரும் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடி வருகிறது. இமாலய இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று ராஜஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
மேலும், ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்துவீசி சென்னையை கட்டுப்படுத்தினால் மட்டுமே சென்னையின் வெற்றி சாத்தியம் ஆகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

