மேலும் அறிய

IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

IPL 2025 CSK vs RR: சென்னை அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி இன்று கவுகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணா அதிரடியால் 182 ரன்களை எடுத்தது. 

183 ரன்கள் டார்கெட்:

இதையடுத்து, 183 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணிக்காக ஆட்டத்தை ரவீந்திரா - ராகுல்  திரிபாதி தொடங்கினர். கடந்த 2 போட்டியில் மோசமாக பந்துவீசிய ஆர்ச்சர் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். அவரது முதல் ஓவரிலே ரவீந்திரா டக் அவுட்டானார். சென்னை அணிக்காக கடந்த 2 போட்டியிலும் சிறப்பாக ஆடி ரவீந்திரா முதல் ஓவரிலே அவுட்டானது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

ஷாக் தந்த ஹசரங்கா:

இதையடுத்து, கேப்டன் ருதுராஜ் - ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர். கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள ராகுல் திரிபாதி இந்த போட்டியில் அதிரடியாக ஆடினார். ஆனால், அவரது நீடிக்கும்  முன்னரே அவரை ஹசரங்கா காலி செய்தார். ஹசரங்கா சுழலில் அவர் 19 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 23 ரன்களில் அவுட்டானார். 

ஏமாற்றிய விஜய் சங்கர்:

சென்னை அணிக்கு ஹசரங்கா கடும் சவால் அளித்தார். ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, தீக்ஷனா, ஹசரங்கா என மாறி, மாறி சென்னைக்கு சவால் அளித்தனர். ருதுராஜ் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி ரன்களை சேர்க்க, வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட ஷிவம் துபேவை ஹசரங்கா காலி செய்தார். அவர் 10 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர் களமிறங்கினார். 

போராடிய ருதுராஜ்:

தன்னை நிரூபித்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பில் விஜய் சங்கர் இந்த முறை கோட்டை விட்டார். அவர் 1 சிக்ஸருடன் 9 ரன் எடுத்த நிலையில் ஹசரங்கா பந்தில் போல்டானார். சுழல், வேகம் மூலம் சென்னைக்கு நெருக்கடி அளித்த நிலையில் 13வது ஓவரில் சென்னை 100 ரன்களை எட்டியது. சென்னைக்காக சிறப்பாக ஆடிய ருதுராஜ் 37 பந்துகளில் அரைசதம் விளாசினார். கடைசி 36 பந்துகளில் சென்னை வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ருதுராஜ் அதிரடிக்கு மாறினார். 

ஹசரங்கா ஓவரில் சிக்ஸர் அடித்து அசத்திய ருதுராஜ் அடுத்த பந்திலே அவுட்டானார். அவர் 44 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, தோனி களமிறங்கினார். தோனி - ஜடேஜா ஜோடி கண்டிப்பாக அதிரடி காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. 

கடைசியில் திக் திக்:

ரியான் பராக் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி அழுத்தம் தந்தார். கடைசி 12 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய அந்த 19வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜாவும் ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால், கடைசி 6 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 

முதல் பந்து சந்தீப் சர்மா வீசிய பந்து ஒயிடாக மாற, மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை தோனி சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். தோனி 11 பந்தில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் கடைசி 3 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமி ஓவர்டன் சிக்ஸர் அடிக்க 2 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 5வது பந்தில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்தது. 

ஆர்ஆர் முதல் வெற்றி:

இதன்மூலம் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஆர்ஆர்-க்கு முதல் வெற்றி இதுவாகும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget