Coimbatore Shutdown: கோவையில் விடுமுறை நாளில் ( 31.03.2025 ) மின்தடையா?
Coimbatore Power Shutdown March 31,2025: கோயம்பத்தூரில் மின் பராமரிப்பு மேற்கொள்வதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்படும்.

Coimbatore Power Shutdown: கோயம்பத்தூரில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்ளும். இதன் மூலம் எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முன்னரே சரி செய்யப்பட்டுவிடும்.
Also Read: Ramadan 2025 wishes: டாப் 7 ரம்ஜான் வாழ்த்துகள் ! உறவுகளுக்கு அனுப்பி அன்பை பகிருங்கள்!
கோவையில் மின்தடை? ( 31-03-2025 )
தமிழ்நாடு முழுவதும், தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்தடை செய்யப்படக் கூடாது என மின்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கோவையில் ரம்ஜான் நாளில் திங்கள் கிழமை மின் தடையானது இல்லை என மின்வாரியத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் பராமரிப்பு பணிகள்:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அந்தந்த பகுதிகளில் ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படும்.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவர். இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி கோவையில் மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!





















