மேலும் அறிய

NTK Krishnagiri Issue | மாணவியிடம் அத்துமீறல் சிக்கிய நாதக நிர்வாகி போலீஸ் அதிரடி

பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி மாணவிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர். இதில் 13 வயது எட்டாம் வகுப்பு மாணவி பள்ளியின் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது என்சிசி பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாகியுமான  சிவராமன் எட்டாம் தேதி அதிகாலை 3 மணி அளவில் 13 வயது எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 மேலும் தனக்கு நடந்த கொடுமையை குறித்து பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்த போதும், அதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என அவர் அலட்சியமாக  தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி மாணவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாணவியின் பெற்றோர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். 

அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின்  பெற்றோர்கள். உடனடியாக இந்த சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் வெஸ்லி உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் சுதாகரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த அவரை  போலீசார் கைது செய்தனர்.

அப்போது சிவராமன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது தடுமாறி விழுந்ததால் அவரது வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோ
KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோ
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து! 2 பேர் உயிரிழந்த சோகம்! உரிமையாளர் கைது
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து! 2 பேர் உயிரிழந்த சோகம்! உரிமையாளர் கைது
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து! 2 பேர் உயிரிழந்த சோகம்! உரிமையாளர் கைது
மதுரையில் பிரிட்ஜ் வெடித்து பெண்கள் விடுதியில் தீ விபத்து! 2 பேர் உயிரிழந்த சோகம்! உரிமையாளர் கைது
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Breaking News LIVE: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
TVK Vijay: த.வெ.க. முதல் அரசியல் மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கிறார் நடிகர் விஜய்
காமெடி மழைதான்! மீண்டும் சேர்ந்த சுந்தர் சி - வடிவேலு காம்போ! கலக்க வரும் கேங்கர்ஸ்!
காமெடி மழைதான்! மீண்டும் சேர்ந்த சுந்தர் சி - வடிவேலு காம்போ! கலக்க வரும் கேங்கர்ஸ்!
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Chidambaram Accident: காலையிலேயே சோகம் - சிதம்பரம் அருகே கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Cucumber Water: உடல் எடையை குறைக்க வெள்ளரி நீர்..  நிபுணர்கள் சொல்வது என்ன?
Cucumber Water: உடல் எடையை குறைக்க வெள்ளரி நீர்.. நிபுணர்கள் சொல்வது என்ன?
Taminadu Round Up: முடிந்தது பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! மதுரையில் தீ விபத்து! தமிழ்நாட்டில் இதுவரை!
Taminadu Round Up: முடிந்தது பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! மதுரையில் தீ விபத்து! தமிழ்நாட்டில் இதுவரை!
Embed widget