CSK vs RCB LIVE: உடைக்கப்பட்ட CSK-வின் கோட்டை.. RCB-யின் சம்பவம்.. சென்னை அணி படுதோல்வி
CSK vs RCB IPL 2025 LIVE Score: சென்னை அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பெங்களூரு அணி. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது

Background
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 இல் தனது முதல் ஆட்டத்தில்வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.
தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி ஐபிஎல் 2025-ஐ தொடங்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் பெற்றிருந்தாலும், ஆர்சிஒபி சிறந்த ரன் ரேட் காரணமாக ஆர்சிபி தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. சிஎஸ்கே நான்காவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.
16 வருட ஏக்கம்
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போடிட்யில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றின் முதல் எடிஷனான 2008ம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கிய வீரர்கள்:
பெங்களூரு அணியில் கோலி, சால்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் ஆட்டத்தை திருப்பக்கூடிய முக்கிய வீரர்களாக உள்ளனர், சென்னையை பொறுத்தவரையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கலக்கிய நூர் அகமது,கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஆட்டத்தை மிகவும் நம்பி உள்ளது.
RCB 196:
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை இழந்தது. ஆர்சிபி அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்களை எடுத்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டும் பதிரானா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
சென்னை அணி தோல்வி:
197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆர்சிபி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரச்சின் ரவீந்திர 41 ரன்களும், தோனி 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அணி விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாதி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், எம்எஸ் தோனி(Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பதிரானா, கலீல் அகமது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ((Wk), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா,ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயால்
இந்த போட்டியின் ஒவ்வொறு பந்து மற்றும் முக்கிய நிகழ்வுகளை நேரலையாக இதில் பார்த்துக்கொள்ளலாம்
CSK vs RCB LIVE:17 ஆண்டுகள் தவம்...CSK-வை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ
51 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
CSK vs RCB LIVE: வீழுந்தது 8வது விக்கெட்..
25 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் ரவீந்திர ஜடேஜா




















