Congress slams Modi | ’’இது தப்பு மோடி!’’பாஜக தேர்தல் விதிமீறல்..கொந்தளிக்கும் காங்கிரஸ்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தியானம் மேற்கொண்டு வரும் நிலையில் அதை ஊடகங்கள் ஒளிபரப்புவது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரியவரும் இந்நிலையில் பிரதமரின் தியானம் தான் தற்போது ட்ரெண்டாக உள்ளது..
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி
கட்ந்த மே 30 மாலை தனது 2 நாள் தியானத்தை தொடங்கினார். இன்று நிறைவு பெற உள்ள மோடியின் தியானம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் பிரதமர் மோடியும் தியானம் செய்யும் நிலையில் அவரது தியானம் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த ஒளிபரப்பு தான் பல கண்டனங்களுக்கு தற்போது ஆளாகியுள்ளது.
பொதுவாக வாக்குப்பதிவுக்குக்கு சில நாட்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஒன்று.
அந்த வகையில் ஜூன்1 வாக்குப்பதிவை வைத்துக்கொண்டு பிரதமர் தனது தியானத்தை மே 30 மாலை தொடங்கியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது..மேலும் இந்த தியானம் ஊடங்களில் நேரலை செய்யப்பட்டிருப்பது எரியும் திரியில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.
இதன் மூலம் மௌன காலத்தில் தேர்தல் விதிகளை கடைபிடிக்காமல் மறைமுகமாக மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது..
இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மோடி தியானம் மேற்கொண்வதாக இருந்தால் அதை ஜுன் 1 மாலை வாக்குபதிவு நிறைவு பெற்ற பின் தொடங்கி இருக்க வேண்டும்.
இல்லை என்றால் மோடியின் இந்த தியானம் எந்த செய்தி ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருக்க கூடாது. ஆக இந்த ஆன்மிக நடவடிக்கை பிரச்சாரத்திற்காக மட்டுமே! பிரதமர் மோடி ஒரு தொகுதியின் வேட்பாளராக இருக்கும் நிலையில், இந்த செயலில் அவர் எப்படி ஈடுபடலாம். தேர்தல் விதிகளை பாஜக மீறியுள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது..