அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது
அகமதாபாத்தில் வெடித்துச் சிதறிய விமானத்தை ஓட்டிய விமானி கிளிவ் குந்தர் பற்றி அவரது ஆசிரியை ஊர்வசி புது தகவலை கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என 242 பேர் பயணித்த விமானத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில் மாணவர்கள், பொதுமக்கள் என 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், 274 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.
அகமதாபாத் விமான விபத்து:
ஏர் இந்தியாவின் 171 ரக போயிங் விமானத்தில் பயணித்த அனைவரின் உயிரும் நொடிப்பொழுதில் பறிபோனது. இந்த நிலையில், இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த விமானத்தை 8 ஆயிரத்து 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்ட கேப்டன் சுமித் சபர்வாலும், அவரது உதவி விமானியாக 1100 மணி நேரம் விமானம் ஓட்டிய ஃபர்ஸ்ட் ஆபீசர் கிளிவ் குந்தரும் ஓட்டிச்சென்றனர். விமானி கிளிவ் குந்தர் குறித்து அவரது ஆசிரியை ஊர்வசி கூறியதாவது,
ஒழுக்கமானவர்:
கிளிவ் குந்தவர் உயிரிழந்தது குறித்து அவரது வகுப்பு நண்பர்களில் ஒருவர் கூறிதான் எனக்குத் தெரிந்தது. இதைப் பற்றி கேள்விபட்டதும் எனது இதயமே உடைந்துவிட்டது. இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கிளிவ் குந்தர் நல்ல அழகான திறமையான இளைஞன். நல்ல ஒழுக்கமான, புத்திசாலியான இளைஞன். கிளிவ் மகிழ்ச்சியான அழகான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார். எனக்கு இது மிக மிக கடினமாக இருக்கிறது. அவர் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடே சோகம்:
ஆசிரியை ஊர்வசி கிளிவ் குந்தருக்கு 11 மற்றும் 12ம் வகுப்பில் இயற்பியல் பாட ஆசிரியையாக இருந்தவர். இந்த விமான விபத்தில் பயணிகளுடன் விமானக் குழுவினர் அனைவரும் உயிரிழந்தனர். டெல்லியில் இருந்து அகமபாதாத்திற்கு வந்த விமானம், அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியது அனைவரையும் கதிகலங்க வைத்தது.
முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட பலரும் இந்த விபத்தில் தீக்கிரையானார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் அவசர கால கதவு வாயிலாக கீழே குதித்து உயிர் பிழைத்தார். இந்த விமான விபத்து குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணம்? யாருடைய தவறால் இந்த விபத்து ஏற்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கிளிவ் குந்தரின் தந்தை கிளிஃபோர்ட் குந்தர் மால்பேவைச் சார்ந்தவர். அவர் படகில் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் ரேகா மங்களூரைச் சேர்ந்தவர். அவர் ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் குழுவில் பணியாற்றியவர். கிளிவ் மும்பையில் படித்து வளர்ந்தவர்.





















