விஜய்காந்த் மகனுக்கு மக்கள் கொடுத்த மார்க் என்ன...படைதலைவன் விமர்சனம் இதோ
விஜய்காந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படை தலைவன் படத்திற்கு மக்கள் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்

படை தலைவன்
மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் சண்முக பாணியன் நடித்துள்ள படம் படை தலைவவன். அன்பு இந்த படத்தை இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர் , முனிஷ்காந்த் , கருடன் ராம் , ரிஷி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படைத்தலைவன் படத்திற்கு மக்கள் சோசியல் மீடியாவில் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
படை தலைவன் விமர்சனம்
அவுட்டேட் ஆன கதை மற்றும் திரைக்கதை பொறுமையை சோதிக்கும் விதமாக இருப்பதாகவும் சண்முக பாண்டியன் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது நடிப்பு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார். ஏஐ மூலம் விஜய்காந்த் வரும் காட்சி மட்டுமே படத்தில் ஒரே ஆறுதல் என்று அவர் கூறியுள்ளார்.
#Padaithalaivan
— Ram Ganesh Manivelu (@krathaganhere) June 13, 2025
A outdated plot and weak screenplay test our patience. Seeing our Captain in AI as Ramana is the only positive and the climax is better than the whole movie. #ShanmugaPandian can do action and Mass films but this one is a Disappointment 😥 Rating 2/5 #Krathagan pic.twitter.com/6nI4iJuNAJ





















