மேலும் அறிய

Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?

பெரும் போர் பதற்றத்திற்கு நடுவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமருடன் பேசியுள்ளார். அப்போது, மோடி அவரிடம் வலியுறத்தியது என்ன தெரியுமா.?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும், இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அப்போது, மோடி அவரிடம் வலியுறுத்திய விஷயம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியது என்ன.?

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது,ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்த பிரதமர் மோடியிடம் அவர் எடுத்துரைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, பதற்றத்தை தணித்து, அமைதியையும், நிலைத் தன்மையையும் ஏற்படுத்த வழிவகுக்குமாறு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பரஸ்பரம் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தி நிலையங்கள், ஏவுகணைகள் பதுக்கப்பட்டுள்ள இடங்கள் மீது திடீரென இன்று அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி முகமது பகேரி, சில முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உள்ளிட்ட 70 பேர்  கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலையடுத்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டதை அந்நாட்டு அரசு ஊடகமான ஐஆரஎன்ஏ உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால், மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ள நிலையில், அதனை நெதன்யாகு செயல்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே, ட்ரம்ப் இஸ்ரேலை பாராட்டியும், ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதனால், இந்த போர் தற்போதைக்கு ஓயுமா என்பது கேள்விக்குறியே...

 

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget