4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
Top 4WD SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் 4 வீல் ட்ரைவ் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Top 4WD SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.20 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் 4 வீல் ட்ரைவ் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
4 வீல் ட்ரைவ் எஸ்யுவிக்கள்:
இந்தியாவில் கார் வாங்க விரும்புபவர்களின் பிரதான தேர்வாக எஸ்யுவி உருவெடுத்துள்ளது. அதன்படி, ஆஃப்-ரோட் பயன்பாட்டிற்கு ஏற்ப மாருதி சுசூகி, மஹிந்திரா மற்றும் ஃபோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 4 வீல் ட்ரைவ் அமைப்பை கொண்ட வாகனாங்களை விற்பனை செய்து வருகின்றன. அதேநேரம், 4 வீல் ட்ரைவ்ட்ரெயின் வசதியை இணைப்பது என்பது, கார்களின் விலையை கணிசமாக உயர்த்துகிறது. இதனால், போட்டித்தன்மை மிக்க விலையில் 4 வீல் ட்ரைவ் கார்களை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானதாக உள்ளது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக் கூடிய 4 வீல் ட்ரைவ் வாகனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மாருதி சுசூகி ஜிம்னி
இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய 4 வீல் ட்ரைவ் மாடலாக மாருதியின் ஜிம்னி கார் உள்ளது. ஜீடா மற்றும் ஆல்ஃபா என 4 வேரியண்ட்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. இதன் விலை ரூ.12.75 லட்சம் முதல் ரூ.14.80 லட்சம் வரை நீள்கிறது. இதில் BS6 உமிழ்வு விதிகளுக்கு பொருந்திய, 1.5 லிட்டர் 4 சிலிண்டர் K15B பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கக் கூடிய இந்த காரானது, மாருதியின் நெக்ஸா நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
2. மஹிந்திரா தார்
இந்தியாவில் மிகவும் விரும்பக்கூடிய 4 வீல் ட்ரைவ் கார் மாடலாக மஹிந்திராவின் தார் கொண்டாடப்படுகிறது. இதன் LX கிரேட் பெட்ரோல் மற்றும் டீசல் ட்ரிம்களானது, மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.15.20 லட்சம் முதல் ரூ.17.62 லட்சம் வரையில் நீள்கிறது. இதில் 2.2 லிட்டர் mHwak டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் mஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இவை 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வேர்ட்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களில் இணைக்கப்பட்டுள்ளன. தார் 3 டோர் எடிஷனின் 4 வேரியண்ட்கள் ரூ.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும். டீசல் எடிஷன் 9 கிலோ மீட்டரும், பெட்ரோல் எடிஷன் 8 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது.
3. ஃபோர்ஸ் குர்கா
ஃபோர்ஸ் மோட்டர் நிறுவனமானது குர்காவின் 4 வீல் ட்ரைவ் ஆஃப் ரோடர் 3 டோர் மற்றும் 5 டோர் எடிஷனை அண்மையில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை முறை ரூ. 16.75 லட்சம் மற்றும் ரூ.18 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2.6 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை கொண்டு, 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் வேரியண்ர் ஆப்ஷன் இதில் இல்லை. இருப்பினும் பல்வேறு ட்ரைவ் மோட்கள், தொழில்நுட்ப அம்சங்கள் குர்கா காரில் நிறைந்துள்ளன. லிட்டருக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
4. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N
இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான எஸ்யுவிக்களில் ஒன்றாக மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ என் திகழ்கிறது. ஆனால், ரூ.20 லட்சம் பட்ஜெட்டில் இந்த காரின் Z4 (E) வேரியண்டை மட்டுமே பெற முடியும். இதன் விலை ரூ. 18.35 லட்சமாகும். இதில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினானது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நான்கு பவர் விண்டோஸ், ஹீட்டருடன் கூடிய ஏசி, அட்ஜெஸ்டபள் ஹெட் ரெஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், பார்கிங் சென்சார், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களோடு, 7 சீட்டர் வசதியில் ஸ்கார்ப்பியோ N கார் மாடல் கிடைக்கிறது. லிட்டருக்கு 12 முதல் 16 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
5. மஹிந்திரா தார் ராக்ஸ்
தார் காரின் 5 டோர் வெர்ஷன் கடந்த ஆண்டு ரூ.12.99 லட்சம் முதல் ரூ.23.39 லட்சம் வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் MX5 வேரியண்ட் மட்டும், ரூ.20 லட்சத்திற்கும் குறைவாக ரூ.19.39 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 6 ஏர் பேக்குகள், டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஷ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபொன் சார்ஜிங், ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய 10 இன்ச் எச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் நிறைந்துள்ளன. லிட்டருக்கு சுமார் 12.4 முதல் 15.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.





















