Tamilnadu Roundup: நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. கீழடி விவகாரத்தில் கொந்தளித்த முதலமைச்சர் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை தீவிரம்
அகமதாபாத் விமான விபத்திற்கு முழு பொறுப்பேற்பதாக டாடா குழுமம் அறிவிப்பு; விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வட மாவட்டங்களில் பரவலாக மழை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 3 ஆயிரத்து 681 கன அடியாக அதிகரிப்பு
மத்திய பா.ஜ.க. அரசு கீழடி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் மழையால் குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இன்று 19 புறநகர் ரயில்கள் ரத்து - பராமரிப்பு பணி காரணமாக தென்னக ரயில்வே அறிவிப்பு
ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் சேரும் சேலம் பழங்குடியின மாணவி - வீடு, மடிக்கணினி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி
புதுக்கோட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி வரை மோசடி - 2 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்டு வந்த நபர் ஆஜர்
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி
காங்கேயத்தில் விற்பனை வரி அதிகாரிகள் எனக்கூறி 12 டன் தேங்காய் எண்ணெயுடன் லாரி கடத்தல்





















