மணிரத்னம் படத்துக்கே நோ சொன்ன ராதாரவி - ஏன்? அதுவும் என்ன படம் தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராதாரவி. குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என பலவித கதாபாத்திரங்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் என பலருடன் நடித்துள்ளார்.
தளபதி படத்திற்கு நோ சொன்ன ராதாரவி:
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தளபதி. ரஜினிகாந்த், மம்மூட்டி ஆகியோர் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான படம் மாபெரும் வெற்றி படம் ஆகும். இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் தேர்வானாவர் நடிகர் ராதாரவி. பின்னர், அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணம் குறித்து அவரே நேர்காணல் ஒன்றில் அளித்துள்ளார்.
காரணம் என்ன?
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, மணிரத்னம் இரண்டு படம் என்னை கூப்பிட்டாரு. ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக அவர் என்னை கூப்பிட்டாரு. தளபதி படம்னு நினைக்குறேன். அதுக்கு என்ன கூப்பிட்டாரு. மொட்டை அடிக்க சொன்னாரு அந்த கதாபாத்திரத்திற்காக.
அப்போ நான் கரெக்ட் சார். அதுக்கு சம்பளம் ஒன்னு கேட்டேன். இதான் உண்மை. அவரு சொன்ன சம்பளம் இருக்கு பாருங்க. அதாவது, உலகத்துல யாருமே சொல்ல முடியாத சம்பளத்தை சொன்னாரு. அப்ப பாத்தேன். சண்டை எல்லாம் போடல. வர்ரேன் சார் சொல்லிட்டு வந்துட்டேன்.
தெரியுமா என்று கூட தெரியவில்லை:
அப்புறமா இங்க ஆபீஸ் வந்தது. அப்போ திருவள்ளூர் சாலை பக்கத்துல இருந்தாரு. அப்போ திருடா திருடானு ஒரு படத்துக்கு கூப்பிட்டாரு. திருடா திருடா படத்துல அவரு என்னை கூப்பிட்டு சொன்னது அப்படியே உங்க அப்பாவை ஞாபகத்துல வச்சுட்டு ஒரு கேரக்டர் பண்ணிருக்கேன். அதான் மலேசியா வாசுதேவன் பண்ணாரு. அப்பவும் இதேதான். 100 நாள் ஷுட்டிங். ஒரு சம்பளம் சொன்னாரு. அது இல்ல சார்னு சொல்லிட்டு வந்துட்டேன். பாத்தா வணக்கம் சொல்லப்போறேன். என்ன தெரியுமா அப்டிங்குறதே எனக்கு இப்போ தெரியல.
இவ்வாறு அவர் கூறினார்.
ப்ளாக்பஸ்டர்:
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை சம்பளம் போதிய அளவு இல்லை என்ற காரணத்திற்காக மூத்த நடிகர் ராதாரவி மறுத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. தளபதி படத்தில் ராதாரவி மறுத்த வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அம்ரிஷ் புரி நடித்தார்.
ரஜினி, மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, பானுப்பரியா, ஷோபனா, நாகேஷ், சாருஹாசன், கிட்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படம் கோலிவுட்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அந்தாண்டு அமைந்தது.





















