VK Pandian Profile : மோடியை அலறவிட்ட தமிழன் ஒடிசாவின் முடிசூடா மன்னன் யார் இந்த VK பாண்டியன்?
ஒடிசாவில் இவருடைய கண் அசைவின்றி எதுவுமே நடக்காது, ஆனால் இவர் சர்வ அதிகாரம் படைத்த ஒடிசா முதலமைச்சரோ அல்லது மாபெரும் கட்சியின் தலைவரோ இல்லை.. சாதாரண ஒரு அரசு அதிகாரி தான்.. ஆனால் முதலமைச்சரையே மிஞ்சும் வகையில் ஒடிசாவின் 30 மாவட்டங்களுக்கும் சாப்பரில் பறந்து சென்று ஆய்வு நடத்தினார் அசத்தினார் அவர்.. எதிர்க்கட்சிகள் அனைத்தும் திக்கு முக்காடி போயி திட்டி தீர்தார்கள்.. ஆனால் ஒடிசா மக்களோ மலர் தூவி மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கினார்கள்.. ஒரு மாவட்டத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஒருவர், எப்படி ஒரு மாநிலத்தையே கையில் எடுக்கும் அளவிற்கு உயர முடியுமா?
முழுக்கை சட்டையில் டக்கின் செய்யாமல், இறுக்கமான பேண்ட் உடன் சம்பவத்தை செய்து காண்பித்தார் ஒரு தமிழர், மதுரைக்காரர்.. அவர்தான் வி கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ்.
மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகே கூத்தப்பன் பட்டியல் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர் வி கார்த்திகேயன் பாண்டியன். அழகர் கோயிலுக்கு அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அரசு பள்ளியில் ஆரம்பக் கல்வியும், நெய்வேலியில் உள்ள ஸ்போர்ட்ஸ் பள்ளியிலும் படித்தவர், இளநிலை விவசாய படிப்பை மதுரையிலும், முதுகலை படிப்பை இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும் மேற்கொண்டார்.
படிக்கும் காலங்களிலேயே படிப்பிலும் நம்பர் ஒன்.. விளையாட்டிலும் நம்பர் ஒன்.. கல்லூரி கல்ச்சுரல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் விகே பாண்டியன் ஏறாத மேடைகளே இல்லை.
படிப்பை முடித்த அவருக்கு இந்திய ஆட்சிப் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டது, 1999 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் எழுதியவருக்கு இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் அதனால் திருப்தி அடைய முடியாத அவர் மீண்டும் 2000ஆம் ஆண்டு தேர்வு எழுதினார், பஞ்சாப் கேடரின் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
ஐஏஎஸ் தேர்வுக்காக பயின்று வந்தபோது, ஒடிசாவை சேர்ந்த சுஜாதாவை ராவுத்தை சந்தித்தார். காதலுக்காக பஞ்சாபில் இருந்து ஒடிசாவுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்றார், பின்னாளில் சுஜாதாவை மணந்தார்.
ஒடிசாவில் அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்ட் களஹந்தி மாவட்டத்தில் தரம்கரில் துணை ஆட்சியர் பொறுப்பு. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க செய்து, நெல் கொள்முதல் செய்வதை ஒழுங்குப்படுத்தி முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்து அரசின் கவனத்தை ஈர்த்தார்.
அடுத்தது 2005 ஆம் ஆண்டு ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச்சில் ஆட்சியராக பொறுப்பேற்றார். அங்குள்ள எல்லா கிராமங்களுக்கும் சென்றார், மக்களின் குறைகளை கேட்டார், வளர்ச்சித் திட்டங்களை தானே முன் நின்று பார்வையிட்டார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதில் ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்தி, இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரி மாடலை அறிமுகப்படுத்தினார். வி கே பாண்டியனை அழைத்த குடியரசு தலைவர் ஹெலன் கெல்லர் விருதை அவருக்கு வழங்கி பெருமைப்படுத்தினார். ஹெலன் கில்லர் விருதை வென்ற முதல் அரசு ஊழியரும் விகே பாண்டியன் தான். அதனால் மையூர் பஞ்சில் நக்சல்கள் ஆதிக்கம் குறைந்தது.
அடுத்ததாக ஒடிசாவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இங்கே தான் விகே பாண்டியன் லைஃபின் டர்ன் பாயிண்ட். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது, தொழிலாளர்களின் வங்கி கணக்கு கே பணத்தை நேரடியாக செலுத்தியது என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கஞ்சம் மாவட்டத்தில்தான் நவீன் பட்நாயக்கின் தொகுதியான ஹிஞ்சிலி அமைந்திருந்தது, இந்த செய்திகளை அனைத்துமே அவருடைய காதுகளுக்கு சென்றது. அவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்க தொடங்கிய நவீன் பட்நாயக் 2011 ஆம் ஆண்டு வி.கே பாண்டியனை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்தார். எடுத்த எடுப்பிலேயே முதல்வரின் தனிச்செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கிருந்து விகே பாண்டியன் கிராஃப் எகிற தொடங்கியது.
நவீன் பட்நாயக்கன் நம்பிக்கைக்குரிய நம்பர் ஒன் அதிகாரியாக மாறிய விகே பாண்டியனின் கீழ் மோ சர்க்கார் திட்டம், வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட இடங்களை மாற்றி அமைக்கும் திட்டம், பூரியில் பாரம்பரிய வளாகத் திட்டம், மேல்நிலை பள்ளிகளை மாற்றி அமைக்கும் திட்டம், ஒடிசாவை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்றும் திட்டம் ஆகியவை முன்னெடுக்கப்பட்டன.
மேலும் 2018 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் மாற்றி அமைக்கும் 5 டி திட்டத்தை அறிமுகப்படுத்தினார் நவீன் பட்நாயக், அதன் மூளையாக இருந்தார் வி.கே பாண்டியன்.
இப்படி நிர்வாக ரீதியிலான அனைத்து முக்கிய விவகாரங்களிலும் வி.கே பாண்டியன் முடிவெடுக்க தொடங்கிய நிலையில், எப்போதும் நவீன் பட்நாயக் உடன் வளம் வந்த இவரை நிழல் முதல்வராகவே பார்க்க தொடங்கினார் அனைவரும்.
ஒடிசா அரசின் சாப்ரில் ஏறி 30 கிராமங்களுக்கும் பறந்தார் வி கே கார்த்திகேயன், எதிர்க்கட்சிகள் அனைத்தும் விமர்சனங்களை பொழிந்தன. ஆனால் அரசு சார்பில் அவருக்கு அமைச்சருக்கு நிகரான மரியாதை வழங்கப்பட்டது. பொதுமக்களோ அவரின் கால்களில் விழுந்து, மலர்களை தூவி, மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
ஒடிசாவின் அனைத்து அரசு திட்டங்களிலும், பிஜு ஜனதா தல் கட்சியின் அனைத்து முடிவுகளிலும் வி.கே பாண்டியன் நினைப்பதே நடக்கும் என்ற நிலை உருவானது.
இப்படிப்பட்ட சூழலில் தான் அக்டோபர் 23ஆம் தேதி தன்னுடைய ஐஏஎஸ் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார் வி கே பாண்டியன். அடுத்த 24 மணி நேரத்திலேயே பிஜு ஜனதா தக்கல் கட்சியில் இணைந்த விகே பாண்டியனுக்கு கேபினட் அந்தஸ்துடன் நவீன ஒடிசா மற்றும் 5 டி திட்டத்தின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் பிரம்மச்சாரியான நவீன் பட்நாயக்கு வாரிசுகள் எதுவும் கிடையாது என்பதாலும், அவருக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த தலைவர்கள் யாரும் கட்சியில் இல்லை என்ற நிலையிலும், ஒடிசாவின் அடுத்த முதல்வராக விகே பாண்டியன் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.