’’நாங்க ஏன் தாக்கல தெரியுமா?’’COMEDY PIECE ஆன பாக். அமைச்சர் நாடாளுமன்றத்தில் குபீர் | Pakistan Defence Minister | India vs Pakistan | Pahalgam Attack | J & K
’’எங்க லொகேஷன் தெரிந்துவிடும்னு தான் இந்தியன் ட்ரோன்ஸ நாங்க தாக்கல’’ என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப் தெரிவித்துள்ளது தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு இந்தியாவின் எல்லை பகுதிகளில் சுற்றித்திரிந்த பாகிஸ்தான் ட்ரோன்களை எஸ் 400- ஐ பயன்படுத்தி வானிலேயே வைத்து அடித்து துவம்சம் செய்தது இந்தியா. இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைமீறு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்க முயன்றதால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க போர்க்களத்தில் இறங்கியுள்ளது இந்தியா.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப் தெரிவித்த கருத்து ஒன்று விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆசிப், இந்தியா நாங்கள் இருக்கும் இடத்தை கண்டறிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இது ஒரு தொழில்நுட்ப விஷயம், அதை என்னால் விளக்க முடியவில்லை. எங்கள் வான்வழி பாதுகாப்பு பிரிவுகளின் இருப்பிடம் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் ட்ரோன்களை இடைமறிக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சரின் இந்த அர்த்தமற்ற சாக்கு நெட்டிசன்களை சிரிப்பு மழையில் நனைய வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரை கையிலெடுத்து 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பூஞ்ச் பகுதியில் எல்லைமீறிய பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் தக்க பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானை எதிர்க்க இந்தியா தயார் நிலையில் இருந்தது. இதனையடுத்து நேற்று காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்களை வானிலேயே அழித்தொழித்தது இந்தியா. இதனையடுத்து பாகிஸ்தான் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த பொறுமையிழந்த இந்தியா, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம்,லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வலிமைவாய்ந்த படை பலம் பாகிஸ்தானை அலறவிட்டு வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா ஆசிப் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி விமர்சன வலையில் சிக்கியுள்ளது. முன்னதாக பலமுறை அமைச்சர் ஆசிப் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.





















