PAK-ஐ கதறவிட்ட சிங்கப்பெண்கள்! Operation Sindoor HEROINES யார் இந்த சோபியா & வியோமிகா?
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்து பெரும் பாவம் இழைத்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை கையிலெடுத்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. பெண்களின் கண்ணீருக்கு காரணமான பாகிஸ்தானை அதே பெண்களை முன்னிறுத்தி இந்திய ராணுவம் சம்பவம் செய்துள்ளது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆபரேஷனில் முக்கிய பங்கு வகித்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமேண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய சுற்றுலா பயணிகள் மீது கொடூர துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தி இந்தியாவையே அதிரடி வைத்தனர். இந்துக்களை குறிப்பாக ஆண்களை அவர்களின் மனைவிகள் கண்முன்னே கதற கதற கொன்று குவித்தனர். 26 அப்பாவி உயிர்களை குடித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியர்களும் கண்ணீர் சபதம் விடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையிலெடுத்து அதிரடி காட்டியுள்ளது. நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இந்திய ராணும் பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. நம் நாட்டு பெண்களின் குங்குமத்தை அளித்து துடிதுடிக்க வைத்த பாகிஸ்தானியர்களுக்கு இந்திய ராணுவ பெண்கள் மூலம் பதிலடி கொடுத்து இழைப்பாறியுள்ளது இந்தியா.
சைலண்டாக ஆபரேஷன் சிந்தூரை இரவோடு இரவாக முடித்த இந்திய ராணுவம் காலையில் இரண்டு பெண்களை முன்னிறுத்தி இந்த ஆபரேஷன் குறித்து ப்ரஸ்மீட் நடத்தியது. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேசன் சிந்தூர் குறித்து விளக்கினர். இந்திய பெண்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு நம் நாட்டு பெண்களை முன்னிறுத்தி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்நிலையில் யார் இந்த இரண்டு சிங்கப்பெண்கள் என்பது குறித்து காணலாம்.
இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் லெப்டினன்ட் கர்னல் குரேஷி. இவர் இந்திய ராணுவத்தின் ராணுவத்தின் தகவல் தொடர்பு (சிக்னல்ஸ்) படைப்பிரிவு அதிகாரி. 36 வயதான இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ராணுவ பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே அதன்மீது ஈர்ப்பு இருந்துள்ளது. இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது கணவர் காலாட்படை அதிகாரி. மார்ச் 2016 இல் சர்வதேச ராணுவப் பயிற்சியில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 18 படைப்பிரிவுகள் பங்கேற்றது. அதில் இந்தியாவின் படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் லெப்டினன்ட் கர்னல் குரேஷி. சோபியா 2006 இல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் பணியாற்றினார். 2010 முதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.தற்போது ஆபரேஷன் செந்தூரில் குரேஷி முக்கிய பங்கு வகித்து சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங் திறமைமிக்க ஹெலிகாப்டர் விமானி. இளம் வயதிலேயா பறக்கும் ஆசை கொண்ட வியோமிகா ராணுவ பின்னனியற்ற குடும்பத்தில் பிறந்து தனது கனவை நனவாக்கியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு பைலட்டாக விமானப்படையில் சேர்ந்தார். முதலில் சீட்டாக் மற்றும் சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார்.
2017ஆம் ஆண்டு விங் கமாண்டராக வியோமிகா சிங் பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு பெண்கள் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இந்த ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வியோமிகா சிங்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த இந்த இரண்டு சிங்கப்பெண்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுமழை பொழிந்து வருகிறது.





















