SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக, நாக்ரத்னா விரைவில் பதவியேற்க உள்ளார்.

SC Women CJI: இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நாக்ரத்னா, வெறும் 36 நாட்கள் மட்டுமே அந்த பதவியை வகிக்க உள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி:
இந்திய உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக, பி.ஆர். கவாய் அண்மையில் பொறுப்பேற்றார். வரும் நவம்பர் 23ம் தேதி வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். அவரது பதவிக்காலம் மிகக் குறைவாக இருப்பதாக கருதினால், நாட்டின் முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நபர் வெறும் 36 நாட்கள் மட்டுமே அந்த பதவியை வகிக்க உள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆயினும், தற்போது வரை ஒரு பெண் கூட தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்தது இல்லை என்பது கடினமான உண்மையாகும்.
முதல் பெண் தலைமை நீதிபதி:
கொலீஜியத்தின் பரிந்துரையின்பேரில் கவாய் புதிய தலைமை நீதிபதியாக குடியரசு தலைவரால் அங்கீகரிக்கப்பட்டார். சஞ்ஜீவ் கண்ணா வரிசையில் கவாயும் 6 மாதங்கள் தான் இந்த பதவியில் செயல்பட உள்ளார். இதுவரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக ஆண்கள் மட்டுமே செயல்பட்டுள்ள நிலையில், 11 பெண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற அந்தஸ்தையே எட்டியுள்ளனர். இந்நிலையில் தான் கொலீஜியம் பின்பற்றும் சீனியாரிட்டி அடிப்படையில், நீதிபதி பி.வி. நாகரத்தினா நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வரும் 2027ம் ஆண்டு பொறுப்பேற்க உள்ளார். வயது மூப்பு காரணமாக வெறும் 36 நாட்கள் மட்டுமே அந்த பதவியை வகிக்க கூடும் என்றாலும், மிகக் குறைந்த காலம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்ற பெருமை கமல் நரைன் சிங்கையே (17 நாட்கள்) சேரும்.
In the dark ages we are living, judges like Justice BV Nagarathna are like a ray of hope pic.twitter.com/xykgHOB264
— Gabbar (@Gabbar0099) January 23, 2024
பெண் தலைமை நீதிபதியின் முக்கியத்துவம்:
கடந்த ஆண்டு பெண் நீதிபதி ஹீமா கோலியின் ஓய்வை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது. அதன்படி, நாகரத்னா மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் மட்டுமே உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகளாவர். இதுவரை உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகளிலேயே, முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியான ஃபாத்திமா பீவி தான் குறைந்தபட்சமாக இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அங்கு பணியாற்றியுள்ளார். அதேநேரம், நாக்ரத்னா ஓய்வு பெறும்போது 6 ஆண்டுகள் 2 மாதங்கள் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி, மிக நீண்ட காலம் அங்கு பணிபுரிந்த பெண் நீதிபதி என்ற பெருமையை பெற உள்ளார். 2024ம் ஆண்டில் நாட்டின் 54வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகவும் அவர் பொறுப்பேற்க உள்ளார்.
2027ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நாகரத்னா இந்த உயர் பதவியை பெறக்கூடும். முன்னதாக இவரது தந்தை ஈ.எஸ். வெங்கடராமைய்யா நாட்டின் 19வது தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் தந்தையும் இந்த பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறை பின்பற்றும் விதிகள்
சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு கொடுப்பது என்ற எழுதப்படாத விதியை நீதித்துறை பின்பற்றுகிறது. அதன்படி, பரிசீலனையில் உள்ள நீதிபதிகளில் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார். அதேபோல், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் அதிக அனுபவம் வாய்ந்தவர் தலைமை நீதிபதி பதவியை பெறுவார். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவருக்கு பதவிக்காலம் என இல்லை. அதேநேரம், 65 வயது வரை மட்டுமே ஒருவரால் அந்த பதவியை வகிக்க முடியும்.
உயர்நீதிமன்றங்களில் 14 சதவிகிதம் மட்டுமே பெண் நீதிபதிகள் இருப்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அதிகளவில் பெண்களை எதிர்பார்ப்பது என்பது அடுத்த சில ஆண்டுகளுக்கு சாத்தியமற்றது (தற்போதைய நடைமுறைகள் அடிப்படையில்).





















