மேலும் அறிய

JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!

போட்டித்தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை  எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை.

ஐஐடி நுழைவுத்தேர்வு  தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும்  அதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சாடி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஐ.ஐ.டி.  மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வியில் பெரும் புரட்சி செய்து விட்டதாக  திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில்,  ஐஐடி நுழைவுத்தேர்வில்  தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%,  மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டை விட பின் தங்கியுள்ளன.

மோசமான நிலையில் தமிழகம்


ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாததுதான். கடந்த பல ஆண்டுகளாகவே  ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை  வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள்  எடுக்கத்தவறிவிட்டன. அதனால்தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

போட்டித்தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை  எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு  சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அத்துடன் மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
MG Motor NEV Architecture: டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
Best Speed for Car Mileage: ‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
Vanni Arasu:
Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
Embed widget