North Indian Issue | ’’அய்யோ..புள்ளை பிடிக்கறவன்?’’கட்டி வைத்த மக்கள்! சிக்கிய வடமாநிலத்தவர்
காரமடை அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி வட மாநில வாலிபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் காரமடை அடுத்த திம்மம்பாளையம் புதூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அந்த இளைஞர் குழந்தைகளை நோட்டமிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிடித்து விசாரித்ததாக தெரிகிறது. அதற்கு அந்த இளைஞர் வட மாநில மொழியில் பேச எதுவும் புரியாததால், அந்த இளைஞர் குழந்தைகளை நோட்டமிட்டு கடத்திச் செல்லும் நபராக இருக்க கூடும் என சந்தேகித்த பொதுமக்கள், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார், காயமடைந்த வட மாநில இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வட மாநில வாலிபர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.