மேலும் அறிய
Tamil Nadu Headlines(03-07-2025): அஜித்குமார் மரணம் 2-வது நாளாக நீதி விசாரணை, கொக்கைன் கடத்தலில் 4 பேருக்கு போலீஸ் கஸ்டடி - 10 மணி செய்திகள்
Tamil Nadu Headlines(03-07-2025): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை வடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தற்போது காணலாம்.

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
Source : ABP
- எடப்பாடி பழனிசாமி நடத்தும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் பங்கேற்க பாஜகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி கோவையில் சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.
- திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு தொடர்பாக 2-வது நாளாக நீதி விசாரணை தொடங்கியுள்ளது. கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் வாக்குமூலம் பெற்ற நிலையில், இன்றும் தொடரும் விசாரணை.
- திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் சாட்சிகளிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. CSR, FIR ஆவணங்கள், காவல்நிலைய மற்றும் கோவில் சிசிடிவி DVR உள்ளிட்டவை விசாரணை நீதிபதியிடம் ஒப்படைப்பு.
- கெக்கைன் போதை பொருள் கடத்தல் வழக்கில், பிரதீப் குமார், பிரசாத், கெவின், ஜான் ஆகியோருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி, NDPS நீதிமன்றம் உத்தரவு. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்வு. ஒரு கிராம் 9,105-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,840-க்கும் விற்பனை.
- மதுரையில், ரூ.45 லட்சம் திருட்டு வழக்கில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, வீடு புகுந்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வயதான தம்பதியை கத்தி முனையில் மிரடடி கொள்ளையடித்தது யார் என காவல்துறை விசாரணை.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக குறைந்தது. நேற்று 28,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்த நிலையிலும், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 9-வது நாளாக தடை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















