மேலும் அறிய

மதுரை முருகன் பக்தர்கள் மாநாடு; குவிந்த லட்சக்கணக்கானோர்; தமிழ்நாட்டில் பாஜக-விற்கு ஊக்கம்

மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், தமிழ்நாட்டில் அது பாஜகவிற்கு ஊக்கமளிக்கும் என்று கருதப்படுகிறது.

மதுரையில், இந்து முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முருகன் பக்தர்கள் மாநாட்டில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இது ஆன்மீக மாநாடாக கருதப்பட்டாலும், 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருவதால், பாஜகவிற்கு இது ஒரு ஊக்கமளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

முருகன் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற பாஜக தலைவர்கள்

மதுரையில், ஆஎஸ்எஸ்-ஐ சார்ந்த இந்து முன்னணி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, பிரமாண்டமாக நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டது. இது, சமீபத்தில் நடந்த மிகப் பெரிய ஆன்மீக மாநாடுகளில் ஒன்றாகும்.

இது ஆன்மீக மாநாடு என்று கூறப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் இதை அரசியல் மாநாடாகவே கருதி, விமர்சித்தனர். இந்த மாநாட்டில், பாஜக தமிழ்நாடு தலைவர் நையினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் மூலம், ஆன்மீக மற்றும் கலாச்சார பண்பாடுகளில், பாஜகவின் உறுதிப்பாட்டை அக்கட்சியினர் அடிக்கோடிட்டு காட்டினர். இது முற்றிலும் ஒரு பக்திப்பூர்வமானது என்று பாஜக நிர்வாகிகள் கூறினாலும், முக்கிய அரசியல் பிரமுகர்களின் பங்கேற்பு, மாநாட்டின் முக்கியத்துவத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.

இந்த நிகழ்வின்போது, நயினார் நாகேந்திரன் ஒரு பக்தி ஆடியோ ஆல்பத்தை வெளியிட்டு, இந்த மாநாடு, முருக பக்தர்களை ஒண்றிணைத்து, மத ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாரம்பரிய இந்து நடைமுறைகளை விமர்சிப்பவர்களை நேரடியாக சாடினார். சனாதன தர்மம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் பெருமை கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

திராவிட கதைகளுக்கு எதிரான ஒரு கலாச்சார நிகழ்வு

இந்த மாநாட்டில், தமிழ்நாட்டின் பண்டைய ஆன்மீக வேர்களையும், கலாச்சார அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. சனாதன தர்மத்தை தமிழ் சமூகத்தின் பிரிக்க முடியாத பகுதியாக நிலைநிறுத்துகிறது. இது, நாத்திக சித்தாந்தங்கள் மற்றும் ஆளும் திமுக தலைவர்களின் கருத்துக்களுக்கு மறுப்பு என்று பலர் விளக்கினர்.

திருப்பரங்குன்றம் மலையின் பெயர் மாற்றப்பட்டதாக கூறப்படுவதற்கு பின்னணியில் நடந்த இந்த கூட்டம், இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு சக்திவாய்ந்த கலாச்சார எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.

தமிழ் கடவுளாக நீண்ட காலமாக போற்றப்படும் முருகப்பெருமான், இந்தியாவின் பரந்த மதக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவும் இருக்கிறார் என்பதை இந்த மாநாடு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இந்த மாநாட்டிற்கு பக்தர்கள் வந்தனர். குறிப்பாக, முருக வழிபாடு ஆழமாக நடக்கும் திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர்.

தமிழ் ஆன்மீக விழுமியங்களை பாதுகாக்கும் கட்சியாக நிலைநின்ற பாஜக

தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் இந்த நிகழ்வை ஒரு பெரிய யாத்திரை போல கருதி, குழுக்களாக வந்து, “முருகா முருகா“ என்று விண்ணை முட்ட கோஷமிட்டு, சடங்குகளில் ஈடுபட்டனர். பலர் இதை ஒரு ஆன்மீக நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒற்றுமை மற்றும் வலிமையின் வெளிப்பாடாகவும் பார்த்தது பாஜக. 

அதன் ஈடுபாட்டின் மூலம், பாரம்பரிய வாக்காளர்களுடனான தொடர்பை வலுப்படுத்தி, தமிழ் ஆன்மீக விழுமியங்களை பாதுகாக்கும் கட்சியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

தோல்வியடைந்த எதிர்க்கட்சியின் விமர்சனங்கள்

இந்த மாநாட்டை விமர்சித்த திமுக, சிபிஎம், மதிமுக போன்ற கட்சிகள், தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக மதத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டின. ஆனாலும், பாஜக தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். இந்த முருகன் மாநாடு முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக ஒப்புதலுடன் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அதிமுக தலைவர் ஆர்.பி. உதயகுமார், சிறப்பு அழைப்பாளராகவே கலந்துகொண்டதாகவும், இந்த நிகழ்வில் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலும் இணைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

2026 தேர்தலுக்கான தாக்கங்கள்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில, இந்த முருகன் பக்தர்கள் மாநாடு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நம்பிக்கை மற்றும் அடையாளத்தின் மீது பாஜகவின் கவனம் எதிரொலிப்பதாக தெரிகிறது. 2026 தேர்தல் போரில், மதமும், கலாச்சாரமும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்பதை, இந்த உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை காட்டுகிறது.

ஆன்மீக மாநாடாக மட்டும் நடைபெற்ற இந்த கூட்டம், தற்போது தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. கலாச்சார பாதுகாப்பு மற்றும் மத பெருமைக்கான வலுவான குரலாக, மக்கள் மனதில் தற்போது பாஜக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

போர்க்களம் போல் மாறிய தஞ்சை... திமுக-தவெக மத்தியில் தள்ளுமுள்ளு, செருப்பு, கற்கள் வீச்சு: முதல்வர் விஜய் கொடும்பாவி எரிப்பு
போர்க்களம் போல் மாறிய தஞ்சை... திமுக-தவெக மத்தியில் தள்ளுமுள்ளு, செருப்பு, கற்கள் வீச்சு: முதல்வர் விஜய் கொடும்பாவி எரிப்பு
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget