Lok Sabha Election 2024 : ஆந்திராவில் வாடிய ரோஜா தலை கீழாக வந்த RESULT அதிர்ச்சியில் YSR காங்.
ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா, கடும் பின்னடைவை சந்தித்துள்ளாதால் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனாக் இருக்கமான முகத்தோடும் சோகமான மனநிலையோடும் ரோஜா வாக்கு என்னும் மையத்தில் இருந்து கிளம்பினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மக்களவை தேர்தல் 2024 முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. அதேபோல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது.
முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ் ஷர்மிலாவை கட்டப்பா தொகுதியில் காங்கிரஸ் களம் இறக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டர். கடந்த முறை இந்த தொகுதியில் வெற்றிபெற்று தான் எம்.எல்.ஏ ஆன அவருக்கு ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக ரோஜா பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், இந்த முறையும் நகரி தொகுதியில் வெற்றி வாகை சூடி விடலாம் என்ற முனைப்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆந்திராவில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா பின்னைடைவை இருக்கிறார். கிட்டத்தட்ட தோல்வி உறுதியானதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து இருக்கமான முகத்தோடும் சோகமான மனநிலையோடும் ரோஜா கிளம்பினார். அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.