மேலும் அறிய

Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?

விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.

Technology வளந்த நிக்குற இந்த காலத்துலயே இன்னும் இந்தியாவுல பொண்ணுங்க sports-ஐ career-ஆ choose பண்றது ரொம்பவே கஷ்டமான விஷயம்.. அப்படி பண்ணுறதுக்கு அவங்க அப்பா, அம்மா, வீடு, நண்பர்கள்னு பல விஷயங்களை கடக்கனும். இன்னைக்கே இவ்ளோ கஷ்டம்னா, சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் எவ்ளோ கஷ்டமா இருந்துருக்கும்..

ஆனாலும், அத்தனை கஷ்டத்தையும் தாண்டி இந்தியாவுக்காக மட்டுமில்ல, ஒட்டுமொத்த ஆசியாவுக்காகவும் ஒரு பெரிய சாதனையை படைச்சவங்கதான் ஆரத்தி சாஹா (ARATI SAHA). உலகத்தோட மிகப்பெரிய கால்வாய்களில் ஒன்னான இங்கிலீஷ் கால்வாயை முதன்முதலா நீச்சலடிச்சு கடந்த ஆசியாவோட முதல் பெண் இவங்கதான்.

Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?

1940ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி கொல்கத்தாவில ஒரு நடுத்தர குடும்பத்துல பிறந்தவங்கதான் ஆரத்தி சாஹா. ஆரத்தியோட ரெண்டு வயசுலயே அவங்க அம்மா இறந்ததால், ஆரத்தியை அவங்க பாட்டிதான் வளத்துக்குறாங்க. அராதியை அவங்க பாட்டி குளிக்க வைக்குறதுக்காக தினமும் பக்கத்துல இருக்குற ஆத்துக்கு கூப்பிட்டு போயிட்டு இருந்தாங்க. அப்போ ஆரத்தி நல்லாவே நீச்சல் அடிச்சுருக்காங்க.. இதைப் பார்த்த ஆரத்தியோட அப்பா, ஆரத்திக்கு முறையா நீச்சல் பயிற்சி கொடுக்கனும்னு முடிவு பண்ணி அங்க இருந்த நீச்சல் அகாடமியில சேத்து விட்ருக்காரு.

ஆரத்தி சாஹா தன்னோட நீச்சல் வாழ்க்கையை தொடங்குனப்ப அவங்களுக்கு வயசு வெறும் 5 தான். அப்போ யாருமே நினைச்சுருக்க மாட்டாங்க.. இந்த குட்டிப்பொண்ணுதான் இந்தியாவுக்காக பல பதக்கங்களை குவிக்கப்போகுதுனு. ஆரத்தி தன்னோட 6வது வயசுல 110 yard freestyle நீச்சல் போட்டியில தங்கப்பதக்கத்தை வாங்குனாங்க. தன்னோட 11 வயசுக்குள்ள ஆரத்தி ஸ்டேட் லெவல்ல பல போட்டிகளை பங்கேற்று 22 பதக்கங்களை குவிச்சாங்க..

இந்தியா சுதந்திரம் வாங்குன பிறகு 1948ம் ஆண்டு மும்பையில தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடத்துனாங்க. அதுல பங்கேற்ற ஆரத்தி 100m freestyle, 200m breast stroke போட்டிகள்ள வெள்ளிப்பதக்கம் வாங்குனாங்க. 200m freestyle-ஆ வெண்கலப்பதக்கமும் வாங்கி அசத்துனாங்க. கொஞ்ச நாள்லயே அப்போ நீச்சல் போட்டியில பேமஸ் இருந்தா டோலி நசீரோட national record-ஆ அராதி முறியடிச்சாங்க. ஸ்டேட் லெவல்லயும் 100m freestyle, 200m freestyle, 100m backstroke-லயும் புதுப்புது சாதனை படைச்சாங்க.

Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?

1952ல அதாவது தன்னோட 12 வயசுலயே அராதி பின்லாந்துல நடந்த ஒலிம்பிக் போட்டியில இந்தியாவுக்காக பங்கேற்றாங்க. அந்த ஒலிம்பிக் போட்டியில எந்த பதக்கமும் வாங்காட்டினாலும் இந்த சின்ன பொண்ணு யாருனு எல்லாரும் திரும்பி பாக்குற அளவுக்கு அவங்களோட திறமை இருந்துச்சு.

ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த ஆரத்தி சாஹா, இங்கிலீஷ் கால்வாய்னு அழைக்கப்பட்ட English Channel –ஆ கிராஸ் பண்ண முடிவு பண்றாங்க. இந்த இங்கிலீஷ் கால்வாய் தெற்கு இங்கிலாந்தை  வடக்கு பிரான்சில் இருந்து பிரிக்குற கடல் பகுதி. கடுமையான குளிர், ராட்சச அலைகள் எல்லாம் இருக்குறதால இந்த கால்வாயை “Mount Everest OF Swimming”னு சொல்றாங்க.

அந்த காலத்துல நீச்சல் போட்டிகள்ல ஜாம்பவானா திகழ்ந்த ப்ரோஜான் தாஸ், மிகிர்சென் ரெண்டு பேரும் ஆரத்தி சாஹாவுக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. கடுமையான பயிற்சிக்கு பிறகு 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி நடந்த இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடக்குற பிரம்மாண்ட போட்டி தொடங்குனுச்சு.. மொத்தம் 58 பேரு பங்கேற்றாங்க.. அதுல 5 பேரு மட்டும்தான் பொண்ணுங்க. அதுல ஆரத்தி சாஹா மட்டும்தான் ஆசியாவுல இருந்து போனவங்க.

Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?

ஆரத்தி தன்னோட முதல் முயற்சியில ரொம்பவே சிரமப்பட்டாங்க. அவங்களுக்கு சப்போர்ட்டுக்கு வர வேண்டிய படகு சரியான நேரத்துக்கு வரல. மற்ற போட்டியாளர்களை விட 40 நிமிஷம் தாமதமாதான் இவங்க போட்டியைவே தொடங்குனது, கடல்ல இவங்க நீச்சல் அடிச்சு போன தூரத்துக்கு எதிர்திசையில இருந்து காத்து வீசுனது உள்ளிட்ட நிறைய விஷயங்களால ஆரத்தியோட முதல் முயற்சி தோல்வியில முடிஞ்சுடுச்சு.

ஆனாலும், இந்த தோல்வியால மனசு உடைஞ்சுடாத ஆரத்தி சாஹா ஒரு மாசம் கழிச்சு சரியா 29 செப்டம்பர் 1959ம் வருஷம் திரும்பவும் இங்கிலிஷ் கால்வாயில நீந்துனாங்க. பிரான்ஸ்ல இருக்குற கேப் கிரிஸ் நெஸ்ல நீந்த தொடங்குன ஆரத்தி சரியா 16 மணி நேரம் 20 நிமிஷம் கழிச்சு, கடுமையான அலை , காற்றை தாண்டி 42 மைல் நீந்தி இங்கிலாந்துல இருக்குற சாண்ட்கேட்டை வந்து அடைஞ்சாங்க. இலக்கை அடைஞ்ச பிறகு இந்தியாவோட கொடியை தூக்கிப்பிடிச்சு தன்னோட வெற்றியை இந்த நாட்டுக்கே அர்ப்பணிச்சாங்க.

Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?

இவங்களோட இந்த அரிய சாதனையை அப்போதைய பிரதமர் நேரு பாராட்டுனது மட்டுமில்லமா.. இந்திய அஞ்சல் துறை சார்பில இவங்களுக்கு அஞ்சல் தலை எல்லாம் வெளியிட்டு கவுரவப்படுத்துனாங்க. அது மட்டுமில்லமா இவங்களோட சாதனையை பாராட்டி இந்திய அரசு 1960ல அதாவது ஆரத்தியோட 19 வயசுலேயே அவங்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவப்படுத்துனாங்க. இவ்ளோ பெரிய சாதனைக்கு சொந்தக்காரங்க தன்னோட 54 வயசுல உடல்நலக்குறைவால இறந்து போனாங்க.

கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் சாதிச்சுட்டு சாகணும்னு சொல்வாங்க. அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவங்களா ஆரத்தி சாஹா வாழ்ந்துட்டு பலருக்கும் எடுத்துக்காட்டா இருக்காங்க.

மேலும் படிக்க : Untold Stories 10 : நெல்சன் மண்டேலாவையே நெகிழவைத்த கால்பந்து புரட்சியாளர் விஜய் பார்சே...! அப்படி என்ன செய்தார்..?

மேலும் படிக்க : Untold Stories episode 9 : காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக குண்டு எறிதலில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர்...! பன்முகம் கொண்ட "பீம்பாய்" பிரவீன்குமார் சோப்தி...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget