Mirabai Chanu Wins Gold: தேசிய விளையாட்டு போட்டிகள்: பளுதூக்குதலில் கெத்தா மாஸா தங்கம் வென்ற சானு... வீடியோ..
தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய விளையாட்டு போட்டிகள் தற்போது குஜராத்தில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு பங்கேற்றார். இவர் தொடக்கம் முதலே அசத்தினார். மொத்தமாக இந்தப் பிரிவில் க்ளின் அண்டு ஜெர்க் மற்றும் ஸ்நாட்ச் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து சானு 191 கிலோ எடையை தூக்கினார்.
India's star weightlifter, Saikhom Mirabai Chanu wins the #Gold in the Women’s 49 Kgs Snatch #36thNationalGames🏋🏻🏋🏽#MirabaiChanu #weightlifting #Goldmedal #Snatch #NationalGames #UnityThroughSports @mirabai_chanu @Media_SAI @sagofficialpage @CMOGuj pic.twitter.com/nmb22mkezX
— National Games Gujarat (@Nat_Games_Guj) September 30, 2022
இதன்மூலம் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்கும் சஞ்சிதா சானு 187 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர்கள் இருவரும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தை ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா சோரன் 169 கிலோ எடையை தூக்கி பிடித்தார்.
Medal Ceremony 🏅 Women's 49 Kg Weightlifting event 🏋️♀️#NationalGames2022 | #36thNationalGames pic.twitter.com/IRYaPIPVsn
— DD Sports - National Games 2022 🇮🇳 (@ddsportschannel) September 30, 2022
இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு சானு, “இத்துடன் நான் ஓய்வு எடுக்க போவதில்லை 2024 பாரிஸ் ஓலிம்பிக் போட்டிகளில் வேகமாக வர உள்ளது. அதற்கான தகுதியை முதலில் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுத்தூக்குதல் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.
தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 36 விளையாட்டுகளில் போட்டி நடைபெறவுள்ளது. இதில் தடகள போட்டிகள் மட்டும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை காந்தி நகரில் நடத்தப்பட உள்ளது.
2023-ம் ஆண்டு ஹங்கேரிநாட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்துகொள்ள தேசிய விளையாட்டு போட்டி செயல்பாடு நேரடி தகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் இன்று தொடங்கியுள்ள இந்த தேசிய விளையாட்டு போட்டி தடகள வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.