'யார்க்கர்' நடராஜனை வாங்க போட்டா போட்டி.. தமிழனை கொத்திட்டு போன டெல்லி!
தமிழக வீரர் தங்கராசு நடராசனை வாங்க ஏலத்தில் பல்வேறு அணிகள் முனைப்பு காட்டிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
இன்றைய ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் தங்கராசு நடராசனை வாங்க பல்வேறு அணிகள் முனைப்பு காட்டிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் இந்த ஏலம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடப்பது இது இரண்டாவது முறையாகும்.
தமிழனை கொத்திட்டு போன டெல்லி:
இன்றைய ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தனர். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
அதேபோல, ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். கடும் போட்டிக்கு மத்தியில் லக்னோ அணி அவரை, 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
நடராஜனை வாங்க போட்டா போட்டி:
இந்த நிலையில், தமிழக வீரர் தங்கராசு நடராசனை வாங்க பல்வேறு அணிகள் முனைப்பு காட்டிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. முன்னதாக, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடி இருக்கிறார்.
யார்க்கர்களை வீசி எதிர் அணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும் நடராசன், அடுத்த சீசனிலும் சிறப்பாக விளையாடுவார் என பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏலம் போன மற்ற வீரர்கள்:
முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும் மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும் வாங்கியது. ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.
வீரர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிகபட்சமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதையும் படிக்க: IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!