TNPL 2023: போதும்ப்பா ஐபிஎல்.. போவோமா டிஎன்பிஎல்...! காத்திருக்கும் 8 அணிகள்... களமிறங்கும் வீரர்கள் யார் யார்?
லைகா கோவை கிங்ஸ் சாய் சுதர்சனை 21.60 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலையில் டிஎன்பிஎல் வரலாற்றில் விலை உயர்ந்த வீரர் ஆனார். சஞ்சய் யாதவ் 17.60 லட்ச ரூபாய்க்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சென்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் சீசன் 7 இன் ஏலம் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் உள்ள பிளஷ் ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாபெரும் ஏலத்தின் முதல் நாளில், லைகா கோவை கிங்ஸ் சாய் சுதர்சனை 21.60 லட்ச ரூபாய்க்கு வாங்கி டிஎன்பிஎல் வரலாற்றில் விலை உயர்ந்த வீரர் என்ற பெருமையினை தந்தது. அவருக்கு பிறகு சஞ்சய் யாதவ் 17.60 லட்ச ரூபாய்க்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு விற்கப்பட்டார். திண்டுக்கல் டிராகன்ஸ் சிவம் சிங்கை 15.95 லட்சங்களுக்கு எடுத்தது. ஏலத்தின் 2 ஆம் நாளில், INR 50,000 அடிப்படை விலையில் இருந்து தொடங்கிய கிரண் ஆகாஷ் எல், 6.40 லட்ச ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸுக்கு விற்கப்பட்டார். வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் வைத்துள்ள வீரர்கள் பட்டியல் இங்கே.
2023 ஏலத்திற்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட அணிகள் விவரம்:
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: யு சைதேவ், நாராயண் ஜெகதீசன், சஞ்சய் யாதவ், பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால், ஹரிஷ் குமார் எஸ், சதீஷ் ஆர், ரஹில் ஷா, ரோஹித் ஆர், சிலம்பரசன் எம், சிபி ஆர், மதன் குமார் எஸ், சந்தோஷ் ஷிவ் எஸ், விஜு அருள் எம், லோகேஷ் ராஜ் டிடி, ராக்கி பி, அய்யப்பன்.
திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித், சுபோத் குமார் பதி, சரவண குமார் பி, சிவம் சிங், கிஷூர் ஜி, ஹேமந்த் குமார் ஜி, விமல் குமார் ஆர், திரன் விபி, பூபதி வைஷ்ண குமார், மதிவாணன் எம், தமிழ் திலீபன் எம்இ, அத்வைத் சர்மா, ரோஹன் ரவி புத்ரா, சரத் குமார் சி, அருண் எஸ், விக்னேஷ் பி, அஃபன் காதர் எம்.
சீசெம் மதுரை பாந்தர்ஸ்: கௌதம் வி, முருகன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், கௌசிக் ஜே, ஸ்வப்னில் கே சிங், ஹரி நிஷாந்த் சி, ஷிஜித் சந்திரன் பி, ஸ்ரீ அபிசேக் எஸ், ஆதித்யா வி, குர்ஜப்னீத் சிங், அன்டன் ஆண்ட்ரூ சுபிக்ஷன் எம், தீபன் லிங்கேஷ் கே, சரவணன் பி, கிரிஷ் ஜெயின், ராகுல் டி, சுதன் டி, அஜய் கே கிருஷ்ணன், ஆயுஷ் எம், சூர்யா பி, கார்த்திக் எஸ்.
லைகா கோவை கிங்ஸ்: ஷாருக் கான், ஜே சுரேஷ் குமார், எம் சித்தார்த், சாய் சுதர்ஷன், எம் முகமது, சச்சின் பி, கவுதம் தாமரை கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யு, அதீக் உர் ரஹ்மான் எம்ஏ, வித்யுத் பி, யுதீஸ்வரன் வி, ராம் அரவிந்த் ஆர், ஹேம்சரண் பி, திவாகர் ஆர், ஜாதவேத் சுப்ரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே.எம்.
நெல்லை ராயல் கிங்ஸ்: ஜி அஜிதேஷ், விஎஸ் கார்த்திக், மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், அருண் கார்த்திக், அஸ்வின் கிறிஸ்ட் ஏ, நிதிஷ் ராஜகோபால், ஸ்ரீ நெரஞ்சன் ஆர், மிதுன் ஆர், ரித்திக் ஈஸ்வரன் எஸ், சூர்யபிரகாஷ் எல், பொய்யாமொழி எம், ஹரிஷ் என்எஸ், இம்மானுவேல் செரியன் பி, ரோஹன் ஜே, சுகேந்திரன் பி, ஆதித்யா ஏ, அருண் குமார் எஸ்.ஜே.
iDream திருப்பூர் தமிழன்ஸ்: துஷார் ரஹேஜா, விஜய் சங்கர், ஆர் விவேக், ஆர் சாய் கிஷோர், அனிருத் சீதா ராம் பி, சதுர்வேத் என்எஸ், பெரியசாமி ஜி, திரிலோக் நாக் எச், விஷால் வைத்யா கே, ராகுல் அய்யப்பன் ஹரிஷ், கணேஷ் எஸ், முகமது அலி எஸ், மணிகண்டன் எஸ், ராதாகிருஷ்ணன் எஸ், வெற்றிவேல் ஐ, கருப்புசாமி எஸ், புவனேஸ்வரன் பி, ராகவன் எம்.
Ba11sy திருச்சி: டபிள்யூ அந்தோணி தாஸ், டி நடராஜன், டேரில் எஸ் ஃபெராரியோ, மோனிஷ் சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன், கங்கா ஸ்ரீதர் ராஜு, சிலம்பரசன் ஆர், ஜாபர் ஜமால், ஆர் அலெக்சாண்டர், மணி பாரதி கே, ராஜ்குமார் ஆர், ஷாஜஹான் எம், பிரான்சிஸ் ரோகின்ஸ், அக்ஷய் வி ஸ்ரீனிவாசன், ஈஸ்வரன் கே, காட்சன் ஜி, முகமது அசீம் கே, சரண் டி, வினோத் எஸ்பி, கார்த்திக் சண்முகம் ஜி.
சேலம் ஸ்பார்டன்ஸ்: எம் கணேஷ் மூர்த்தி, ஜகநாத் ஸ்ரீனிவாஸ் ஆர்எஸ், கௌசிக் காந்தி எம், அபிஷேக் தன்வர், ஆகாஷ் சும்ரா, மான் கே பாஃப்னா, சன்னி சந்து, அபிஷேக் எஸ், முகமது அட்னான் கான், அமித் சாத்விக் விபி, கௌரி சங்கர் ஜே, மோகித் ஹரிஹரன் எஸ், குரு சயீ எஸ் , யுவராஜ் வி, கார்த்திகேயன் ஆர், கவின் ஆர், சச்சின் ரதி, பிரசாந்த் ஆர், அரவிந்த் எஸ்.