மேலும் அறிய

டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?

பிரதமர் வருகையை ஒட்டி திருச்சியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள எஸ்.பி.ஜி. அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்: திருச்சிக்கு பிரதமர் மோடி வருகையை ஒட்டி வரும் 27-ந் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளதாவது:  பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு ராணுவ விமானத்தில் தூத்துக்குடிக்கு வரும் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்கிறார். அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.
 
அன்று இரவே தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்த பின்னர் கார் மூலம் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பிரகதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனமும் செய்கிறார். மாலையில் மீண்டும் திருச்சிக்கு வந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
 
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார், அதிரடிப்படை போலீசார் மற்றும் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவான எஸ்.பி.ஜி. குழுவினர் என ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து வந்துள்ள எஸ்.பி.ஜி. அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்கள்.

பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் திருச்சி சுற்றுலா மாளிகை அருகிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர பகுதியில் நாளை 27-ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், மீறி இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Trichy Power Cut: திருச்சியில் நாளை (16-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியத்தின் லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (16-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின் வாரியத்தின் லிஸ்ட் இதோ
திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள்... காவல்துறையினர் எடுத்த அதிரடி: போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
திருச்சி ரயில்வே வளாகங்களில் பசுமைப் புரட்சி! 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட தெற்கு ரயில்வே – பிஏபிடி மெகா திட்டம்!
Trichy Power Cut: திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (14-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget