Asian Athletics Championship : ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: தமிழ்நாடு வீரர் வெண்கலம் வென்று அசத்தல்..!
ஆசிய தடகள சாம்பியம்ஷிப் தொடரில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய தடகள சாம்பியம்ஷிப் தொடரில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவிற்கு 10 வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் சந்தோஷ் குமார் 49.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
India's Santhosh Kumar wins bronze in men's 400m hurdles #AsianAthleticsChampionships
— Athletics Federation of India (@afiindia) July 15, 2023
கத்தாரின் முகமது ஹெமெய்டா பாசெம் 48.64 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். ஜப்பானின் யுசாகு கோடாமா 48.96 வினாடிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி வென்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

