MK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதலிடத்தை ஸ்டாலின் தக்கவைத்த நிலையில், 2வது இடத்தில் இபிஎஸ்-ஐ பின்னுக்கு தள்ளியுள்ளார் விஜய்.
2026 சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. இந்த தேர்தலில் புதிதாக விஜய்யும் களமிறங்குவதால் கள நிலவரம் எப்படி மாறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 2026 தேர்தல் திமுக vs தவெக என்று தான் இருக்கும் என சூளுரைத்தார் விஜய். அவர் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அதிமுகவின் இடத்துக்கு விஜய் குறிவைப்பதாக விமர்சிக்கப்பட்டது. எதிர்க்கட்சி இடத்தில் தவெகவை வைப்பதையே அக்கட்சியினரின் பேச்சுகளும் காட்டின.
இந்தநிலையில் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்று சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ¬27% பேர் ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார் என தெரிவித்துள்ளனர். இதில் ஒரு ட்விஸ்ட்டாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய்க்கு ஆதரவாக 18% பேரும், இபிஎஸ்-க்கு ஆதரவாக 10% பேரும் வாக்களித்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 9% வாக்குகளுடன் அண்ணாமலை இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இபிஎஸ்-ன் செயல்பாடுகள் பற்றி கேட்கப்பட்ட போது 8% பேர் மிகவும் திருப்தியாக உள்ளது என்றும், 27% பேர் திருப்தியாக உள்ளது என்றும், 32% பேர் திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதை இந்த கருத்துக்கணிப்பு வருகிறது. இந்த ரசிகர்கள் பட்டாளம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்வி இருப்பதாகவும், இபிஎஸ்-ஐ விஜய்யால் பின்னுக்கு தள்ள முடியாது என்றும் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தான் விஜய்யின் வாக்கு சதவீதமே தெரியும் என்றும், தமிழ்நாட்டில் என்றுமே திமுக vs அதிமுக இடையே தான் போட்டி என்றும் அதிமுகவினர் கொந்தளித்து வருகின்றனர்.





















