Indian Win Gold : வயசெல்லாம் ஒரு விஷயமா..? உலககோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி..! தங்கப்பதக்கம் வென்ற 46 வயதான இந்திய வீரர்.!
தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் 46 வயதான இந்திய வீரர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தென்கொரியாவின் சாங்வான் நகரில் துப்பாக்கிச்சுடும் போட்டிக்கான உலககோப்பை போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை போட்டியில் ரைபிள், பிஸ்டல் ஷாட்கன் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஸ்கீட் ஈவன்ட் பிரிவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மைராஜ் அகமத்கான் அபாரமாக விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றார். 46 வயதான மைராஜ் அகமத்கான் 37 புள்ளிகள் பெற்று இந்த பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். மைராஜ் அகமத்கானுக்கு இதுதான் முதல் உலககோப்பை தங்கப்பதக்கம் ஆகும்.
ஏற்கனவே இந்தியாவின் அர்ஜூன் பபுதா, சாஹூ துஷார்மானே, பார்த் மக்கிஜா ஆகியோர் சிறப்பாக ஆடி பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களில் அர்ஜூன் மற்றும் சாஹூ இருவரும் இரண்டாவது தங்கப்பதக்கத்தை ஏற்கனவே பெற்றிருந்தனர். இவர்கள் மட்டுமின்றி இளவேனில் வளரிவன், ரமீதா, மெகுலி கோஷ் ஆகியோரும் சிறப்பாக ஆடி அசத்தி வருகின்றனர்.</p
Now this is special folks
— India_AllSports (@India_AllSports) July 18, 2022
46 yr old Mairaj Ahmad Khan wins GOLD medal in Skeet event of Shooting World Cup (Changwon) with 37 pts in the medal match.
Its maiden World Cup Gold medal for Mairaj.
Proud of you @MairajKhanOLY pic.twitter.com/v1pj54vY22
>
இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால் அவர்களுக்கு ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Hardik Pandya Record: இந்தியாவிலே முதல் வீரர்...! ஆல் ரவுண்டர் ஹர்திக்பாண்ட்யா படைத்த சாதனை என்ன தெரியுமா..?
மேலும் படிக்க : Watch Video: எல்லாமே நீங்கதான்.. இந்த பாட்டில் உங்களுத்தான்.. ரவி சாஸ்திரிக்கு அடடே பரிசைக் கொடுத்த பண்ட்!
மேலும் படிக்க : Asia Cup 2022: பெட்ரோலுக்கே வழியில்லை.. கிரிக்கெட்டா? இலங்கையில் இருந்து இடம்மாறும் ஆசிய கோப்பை! திட்டம் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்