Hardik Pandya Record: இந்தியாவிலே முதல் வீரர்...! ஆல் ரவுண்டர் ஹர்திக்பாண்ட்யா படைத்த சாதனை என்ன தெரியுமா..?
ஒருநாள் மற்றும் டி20 இரண்டு வடிவ போட்டிகளிலும் 50 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப்பண்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 71 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் 50 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ஜேசன்ராய், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் கேப்டன் ஜோஸ்பட்லர் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அதுமட்டுமின்றி, இந்தியா 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களமிறங்கிய ஹர்திக்பாண்ட்யா, ரிஷப்பண்டுடன் ஜோடி சேர்ந்து 133 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர். ஹர்திக் பாண்ட்யா நெருக்கடியான நேரத்தில் பொறுப்புடன் ஆடி 55 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்கள் விளாசினார்.
இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்ட்யா இந்த போட்டி மட்டுமின்றி இதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் அபாரமாக ஆடினார். இதன்காரணமாக, ஹர்திக்பாண்ட்யாவிற்கு தொடர்நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னதாக, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் விளாசியது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 260 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா, ஷிகர்தவான், விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த நிலையில் ஹர்திக்பாண்ட்யா மற்றும் ரிஷப்பண்ட் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
மேலும் படிக்க : IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்ட் அபார சதம்...! ஆல்ரவுண்டர் ஹர்திக் கலக்கல்..! 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று இந்தியா அசத்தல்..!
மேலும் படிக்க : Babar Azam Beat Kohli Record : அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்! கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்