(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: எல்லாமே நீங்கதான்.. இந்த பாட்டில் உங்களுத்தான்.. ரவி சாஸ்திரிக்கு அடடே பரிசைக் கொடுத்த பண்ட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் 125* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று மான்சஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அசத்தலாக ஆடி சதம் கடந்து அசத்தினார். அவர் 113 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 125 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
Pant offering his champagne to Ravi Shastri#INDvENG #OldTrafford #Pant #TeamIndia pic.twitter.com/n9HguNNuID
— Tejesh R. Salian (@tejrsalian) July 17, 2022
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சதம் கடந்த ரிஷப் பண்ட்டிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் சேர்ந்து பண்டிற்கு சாம்பெயின் பாட்டீல் ஒன்று வழங்கப்பட்டது. அந்த சாம்பெயின் பாட்டீலை ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. ரவி சாஸ்திரி ஸ்கை ஸ்போர்ட்ஸ் சார்பில் தற்போது வர்ணனை செய்து வருகிறார். இதற்காக அவர் நேற்று மைதானத்தில் இருந்தார். அந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த போது ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அந்த சமயத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சதம் கடந்து அசத்தினார். தற்போது ரிஷப் பண்ட் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். இதற்காக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு இந்தப் பரிசை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்