மேலும் அறிய
Advertisement
மகிழ்ச்சியுடன் குவிந்த மக்கள் வெள்ளம்.. ஏலவார்க்குழலி அம்மனுடன், ஏகாம்பரநாத உற்சவர் 4 ராஜ வீதி உலா..
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா 6-ஆம் நாள் இனிதே நடைபெற்றது
பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்க் குழலி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்க்குழலி அம்மனுக்கும் மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ, ரோஜா பூ, உள்ளிட்ட பஞ்சவர்ண பூ, மலர் மாலைகள் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து, மின்விளக்குகள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 33அடி உயரம் உள்ள வெள்ளிக் தேரில் எழுந்தருள செய்து நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா செல்லும் வெள்ளித் தேர் உற்சவம் நடைபெற்றது.
6ம் நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வில் மின்விளக்குகள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் ஏலவார்க் குழலி அம்மனுடன் ஏகாந்தமாய் ஏகாம்பரநாதர் சுவாமி மேள,தாள,சிவ வாத்தியங்கள் ஒலிக்க உற்சவத்தை காண மகிழ்ச்சியுடன் குவிந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தியவாறு சென்ற வெள்ளித்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வந்த ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மனை நள்ளிரவு நேரத்திலும் திரளான பக்தர்கள் குவிந்து வழியெங்கும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
ஏகாம்பரநாதர் கோயில் தல வரலாறு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பர நாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன்பெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.
விழாக்கள்
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion