நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் கைது.. கோடி கணக்கில் மோசடி.. கடமையை செய்த டெல்லி போலீஸ்
ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல காமெடி நடிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் எஸ்.சீனிவாசன். இவரை அனைவரும் பவர் ஸ்டார் என்றே அழைப்பார்கள். இவர் நடித்த காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இவர் நடிப்பையும் தாண்டி சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு ரூ.1,000 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, ரூ.10 கோடி மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படியில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இவர் மீது பல மோசடி வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் மீது 6 மோசடி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், ரூ.5 கோடி மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் இன்று கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,000 கோடி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார் என புகார் எழுந்துள்ளது. மேலும், மோசடி செய்த பணத்தில் திரைப்படம் எடுப்பது சொந்த செலவுக்காக பணத்தை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு நீதிமன்றத்தால் குற்றவாளி அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.




















