மேலும் அறிய

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பயிர் காப்பீடு செய்து இழப்பைத் தவிர்ப்பது எப்படி?

காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்திட வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2025-26ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நெல், நிலக்கடலை மற்றும் கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண்மை இணை இயக்குநர் இரா.சீனிவாசன் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்வதன் மூலம் எதிர்பாராத இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மேலும் இது விவசாயிகளுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்-I (நடவு) பயிர் செய்துள்ள விவசாயிகள் ஜூலை 31, 2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் நிலக்கடலை மற்றும் கம்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30, 2025-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி தேதி நீட்டிக்கப்படாது என்பதும், விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்ததோடு மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம்

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்திட வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025 - 26ம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு காரீப் பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் சொர்ணவாரி -1 பயிருக்கு வரும் 31ம் தேதியும், கம்பு பயிருக்கு ஆகஸ்ட் 16ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாள். நெற்பயிருக்கு ஏக்கருக்கு 463 ரூபாய், கம்பு பயிருக்கு 237 ரூபாய் பிரீமிய கட்டணமாக பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தலாம். அதற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை தேவை.

பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்திட வேண்டும். எனவே இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget