மேலும் அறிய
GT Vs MI : மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்!
நேற்று நடந்த பிளே ஆஃப் 2 போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி, குஜராத் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

குஜராத் டைட்டன்ஸ் அணி
1/6

நேற்று மும்பைக்கும் குஜராத்துக்கும் இடையே நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியின் போது மழை பெய்ததால் 7:45 மணி அளவில் டாஸ் போடப்பட்டது
2/6

டாஸை வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
3/6

முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர்
4/6

பின்னர் ஆவேசமாக ஆடிய கில் 60 பந்துகளில் 10 சிக்ஸர்களையும் 7 பவுண்டரிகளையும் விளாசி 129 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்தனர் குஜராத் டைட்டன்ஸ்.
5/6

பின்னர் களம் இறங்கிய மும்பை அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டை பரிகொடுத்து வந்தத்ய். சூரியகுமார் மட்டும் நிதானமாக ஆடி 61 ரன்களை குவித்தார். இருப்பினும் குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது மும்பை.
6/6

வெற்றி பெற்ற குஜராத் அணி, இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது. மே 28 ஆம் தேதியன்று சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையே ஐபில் 16வது தொடரின் இறுதி போட்டி நடக்கவுள்ளது.
Published at : 27 May 2023 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion