மேலும் அறிய
தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் அணி!
ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்த வெற்றியை நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் VS இங்கிலாந்து
1/6

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி நேற்று மோதின இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
2/6

பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். அவ்வப்போது இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பௌலிங்கை பிரித்து மேய்ந்தார்கள்.
3/6

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் மற்றும் ஜத்ரன் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஜத்ரன் நிதானமாக ஆட, அதிரடி காட்டிய குர்பாஸ் அரை சதம் கடந்தார்.
4/6

ஜத்ரன் 28 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரஹ்மத்தும் மூன்று ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் போர், சிக்ஸர் என இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர்.
5/6

ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சொர்ப்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
6/6

இங்கிலாந்து 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த முஜிபுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Published at : 16 Oct 2023 09:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement