மேலும் அறிய
75th Republic Day : ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின்.. குடியரசு தின விழாவை சிறப்பித்த கலை நிகழ்ச்சிகள்!
75th Republic Day : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை, காமராசர் சாலையில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை காமராசர் சாலையில் நடந்த 75வது குடியரசு தினவிழா
1/6

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
2/6

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முப்படைகளின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோரை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
3/6

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று, சென்னை, காமராசர் சாலையில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
4/6

குடியரசு தின விழாவில் நடக்கும் அணிவகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
5/6

75வது குடியரசு தின விழாவை சிறப்பிக்க மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
6/6

சென்னை, காமராசர் சாலையில் நடைப்பெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாரயணசாமி நாயுடு வேளாண்மை விருது. முதலமைச்சரின் சிறப்பு விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும் கோப்பைகளையும் பெற்றவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Published at : 26 Jan 2024 11:23 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement