மேலும் அறிய
ஊட்டச்சத்து மிகுந்த பார்லி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்தெரிஞ்சிக்கோங்க!
பார்லி சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் எப்படி உணவில் சேர்க்கலாம் என்பது பற்றி இங்கே காணலாம்.

பார்லி
1/5

முழுமையான தானிய உணவு பாலி. தற்போது, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தி வரும். 1000 ஆண்டு பழமையான உணவுப் பொருளாக உள்ளது. இதில் உள்ள, 350 கலோரிகளில், 80 சதவீதம், கார்போஹைட்ரேட் மாவுச்சத்து நிறைந்துள்ளது.
2/5

எகிப்து நாட்டில் பிரமிடு கட்டிய தொழிலாளர்களின் முக்கியமான உணவாக, பார்லி தான் இருந்தது. பார்லியில் அதிகளவில் பாஸ்பரஸ், நியாசின், பொட்டாசியம், கோலின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் உள்ளது. 100 கிராம் பார்லி அரிசியில், ஒரு நாளைக்கு தேவையான பாதி நார்ச்சத்து கிடைத்து விடும்.
3/5

உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் சுகர் அளவை குறைக்க, ஓட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள், அதற்கு பதிலாக, பார்லி சாப்பிடலாம். சமைக்கும் போது, மற்ற தானியங்களிலுள்ள நார்ச்சத்து கொஞ்சம் குறையும். ஆனால், பார்லியில், 'பீட்டோ குளூக்கான்' என்ற நார்ச்சத்து, எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை. இதுவே இதன் தனிச்சிறப்பு.
4/5

டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள், அரிசி சாதம் சாப்பிடுவதை விட, பார்லி நீர் குடித்தால், ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் உப்பு, மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. நரம்புகளை பலப்படுத்தும், வைட்டமின் பியும் உள்ளது.
5/5

பார்லியில் உள்ள அதிகளவு நார்சத்து, ஆன்ட்டி ஆக்சிடெண்ட், பிளோவனாய்ட்ஸ், வைட்டமின் இ, ஏ மற்றும் செலினியம் சத்து, நுரையீரலின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை,பார்லி கஞ்சி சாப்பிட்டு வர, உடலிலுள்ள நச்சு வெளியேறும். காய்கறிகள் சமைக்கும் போது, பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்துக் கொண்டால், சுவையாக இருக்கும்.தோசை மாவில் கலந்தும் சாப்பிடலாம்.
Published at : 18 Nov 2024 08:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விளையாட்டு
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement