11, 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்- ஆக.7 முதல் பெறுவது எப்படி?- முக்கிய அறிவிப்பு!
TN 11th 12th HSC original mark sheet: பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஏப்ரல் 2024 2025 மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
மார்ச் / ஏப்ரல் 2024 2025 மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பார்வையில் காணும் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை உறையிடும் பணியினை முடித்து அதனை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் நாள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கும் நான் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை உறையிடும் பணியினை முடித்து அதனை மாவட்டக் கல்வி |அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நாள் - 06.08.2025
மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமைஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள் - 06.08.2025
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கும் நாள்- 07.08.2025
அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்
மார்ச் 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவு உட்பட) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் 07.08.2025 அன்று முதல் வழங்கப்படும்.
பெறுவது எப்படி?
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலை (Statement Of Marks) பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.























