IND Vs ENG: இப்படி ஒரு கம்பீர பாத்து இருக்க மாட்டீங்க..! குஷியில் மோர்கெல் மேல எகிறி குதிச்சு - வைரல் வீடியோ
IND Vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்டில் வெற்றி பெற்றதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

IND Vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்டில் வெற்றி பெற்றதை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
உணர்ச்சிவசப்பட்ட கம்பீர்:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத நபராகவே அறியப்படுகிறார். ஆனால், அவரே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் மைதானத்தில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை துள்ளிக் குதித்து கண்ணீர் மல்க கொண்டாடியுள்ளார். எப்போதும், எந்தவொரு சூழலிலும் சிடுசிடுவென காட்சியளிக்கக் கூடிய கம்பீர், ஓவல் வெற்றியை கண்ணீர் மல்க, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் உடன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
ஓவல் டெஸ்டின் பரபரப்பானை இறுதிகட்ட வீடியோ தொகுப்பை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “கடைசி 2 விக்கெட்டுகளுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது, டங்க் ஆட்டமிழந்ததை சக பணியாளர்கள் துள்ளி குதித்து கொண்டாட கம்பீர் கைகளை மட்டும் தட்டி அணியை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார். தொடர்ந்து கடைசி ஒரு விக்கெட்டிற்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது, கம்பீர் மிகவும் பதற்றத்துடன் காட்சியளிக்கிறார். தொடர்ந்து, சிராஜின் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்ப் சிதற, அட்கின்சன் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த ஒட்டுமொத்த குழுவினரும் மகிழ்ச்சியில் திளைத்து துள்ளி குதித்துள்ளனர். கம்பீர் கண்ணீர் மல்க கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
𝗕𝗲𝗹𝗶𝗲𝗳. 𝗔𝗻𝘁𝗶𝗰𝗶𝗽𝗮𝘁𝗶𝗼𝗻. 𝗝𝘂𝗯𝗶𝗹𝗮𝘁𝗶𝗼𝗻!
— BCCI (@BCCI) August 4, 2025
Raw Emotions straight after #TeamIndia's special win at the Kennington Oval 🔝#ENGvIND pic.twitter.com/vhrfv8ditL
தொடர்ந்து, பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மார்கலை இறுக்கி அணைத்து துள்ளி குதித்து மேலே ஏறி அமர்ந்துள்ளார். வார்த்தைகள் இன்றி கத்தி கூச்சலிட்டு வெற்றி பெருவெள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கண்ணீர் மல்க சக பயிற்சி பணியாளர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள்” அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அணி முன்னேற்றம்:
கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பல எதிர்பாராத வரலாற்றில் மோசமான தோல்விகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது, உள்ளூரிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது மற்றும் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தது, கம்பீருக்கு எதிரான பல கேள்விகளை எழுப்பியது. இந்த சூழலில் தான், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது.




















