Thalaivan thalaivii : போன வருடம் மகாராஜா இந்த வருடம் தலைவன் தலைவி..வசூல் மழையில் விஜய் சேதுபதி
Thalaivan Thalaivii விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

தலைவன் தலைவி வசூல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்துள்ள படம் தலைவன் தலைவி. கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 12 நாட்களில் தலைவன் தலைவி திரைப்படம் உலகளவில் ரூ 75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
கமர்சியல் டிராக்கில் திரும்பிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்து கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. இந்தியா தவிர்த்து சீனாவிலுல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மகாராஜா. மகராஜா படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வெளியான விடுதலை 2 , ஏஸ் ஆகிய இரு படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை தழுவின. இப்படியான நிலையில் வெளியான தலைவன் தலைவி ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரியளவில் வரவேற்கப்பட்டது. விஜய் சேதுபதி நித்யா மேனன் கூட்டணி , இயக்குநர் பாண்டிராஜனின் கலகலப்பான திரைக்கதை , யோகி பாபு பின் நகைச்சுவை , சந்தோஷ் நாராயணனின் இசை என படத்தில் பாராட்டப்பட்ட அம்சங்கள். இப்படத்தின் மூலம் மறுபடியும் கமர்சியல் டிராக்கில் திரும்பியுள்ளார் விஜய் சேதுபதி.
தலைவன் தலைவி வசூல்
தலைவன் தலைவி திரைப்படம் முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ 25 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் ரூ 50 கோடி வசூலித்து தற்போது 12 நாட்களில் ரூ 75 கோடி வசூலித்து பெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
#ThalaivanThalaivii storms past ₹75+ CRORES gross worldwide! 🌟 #VijaySethupathi & #NithyaMenen's sizzling chemistry, #pandiraj's magic, and a perfect blend of love, laughter & drama make it a BLOCKBUSTER! 🔥
— Mix Show (@MixShow1016584) August 6, 2025
Keep the love pouring in! 🎥💥 #ThalaivanThalaivii… pic.twitter.com/mtTOoT08o2





















