மேலும் அறிய

சங்கீதா - கிரிஷ் விவாகரத்தா?.. இன்ஸ்டாகிராமில் தெரிய வந்த உண்மை.. கோலிவுட்டில் மீண்டும் புது பிரச்னையா?

நடிகை சங்கீதா தனது காதல் கணவரை விட்டு பிரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சங்கீதா. இவர் பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்கும் சங்கீதா பிசியான நடிகையாக மாறியிருக்கிறார். சக நடிகைகளை சந்தித்து பேசுவது, பார்ட்டி என ஜாலியாக இருக்கும் சங்கீதா காதல் கணவர் கிரிஷ்ஷை விட்டு தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை

மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனாலும், தமிழில் கபடி கபடி, டபுள்ஸ், உதவிக்கு வரலாமா, காதலே நிம்மதி, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார். தமிழில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார் சங்கீதா. தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தனக்கான மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டார். தமிழ் பெண்ணாக இருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்து பிஸியான நடிகையாக மாறினார். அவர் நடித்த படங்களும் ஹிட் அடிக்க தொடங்கின. 

சர்ச்சையான படத்தில் சங்கீதா

தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்த சங்கீதா தமிழ் திரையிலகினரை வியக்க வைத்தார். நடிக்க வராது என்று சொன்னவர்களின் வாயடைக்க வைத்தார். அதே நேரம் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லை. இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவான உயிர் படத்தில் சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரத்தில் நடித்து கெட்டப்பெயரை வாங்கி கொண்டார் சங்கீதா. இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இதில், தகாத உறவை அம்பலப்படுத்தி வெளியான படமாகவும், அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்த சங்கீதா கணவரின் தம்பி மீது ஆசைக்கொள்பவராக நடித்தார். இதன் பிறகு தனம் படம் சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. 

ரசிகர்கள் கடும் விமர்சனம்

படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக சங்கீதா வலம் வந்தார். திருமணத்தில் கிரஷ்ஷை விட சங்கீதாவிற்கு அதிக வயது என செய்திகள் பரவியது. ஆனால், சமீபத்தில் சங்கீதா அளித்த பேட்டியில் என்னை விட கிரஷ்ஷிற்கு வயது அதிகம் என தெரிவித்தார். அதே பேட்டியில் தமிழை விட தெலுங்கு திரையுலகம் தான் பிடித்திருக்கிறது. அங்கு தான் எனக்கான மரியாதையும், திறமையும் அங்கீகரிக்கப்பட்டது எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஏன் வாழ்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் பலர் விமர்சித்தனர்.

விவாகரத்து 

இந்நிலையில், நடிகை சங்கீதாவும் கிரிஷ்ஷூம் விவாகரத்து பெற இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இவருக்கும் கிரஷ்ஷூக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சங்கீதா கிரஷ் என்ற தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை  Sangeetha Act என மாற்றியிருக்கிறார். இதனால், சங்கீதா கணவரை விட்டு பிரிய இருப்பதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அவர் கிரஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கவில்லை. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, சமூகவலைதளங்களில் சங்கீதா குறித்த செய்தி அதிகம் உலா வருகிறது.

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

Embed widget