மேலும் அறிய

ITI Admission: ஐடிஐ சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு! இலவச பயிற்சி, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உறுதி! உடனே விண்ணப்பியுங்கள்!

ITI admission 2025: இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்கள்‌ நேரடி சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறையின்‌ கீழ்‌ 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 311 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன. இவற்றில்‌ 2025- 2026ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்கள்‌ நேரடிச்‌ சேர்க்கை 23.06.2025 முதல்‌ தொடங்கி நடைபெற்று வந்தது.

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்க அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள்‌ தாங்கள்‌ விரும்பும்‌ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ நேரில்‌ சென்று தாம்‌ விரும்பும்‌ தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரலாம்‌.

என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பயிற்சிக்‌ கட்டணம்‌ இல்லை.
  • அத்துடன் கல்வி உதவித் தொகையாக மாதம்‌ ரூ.750 வழங்கப்பட உள்ளது‌.
  • தமிழக அரசு வழங்கும்‌ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள்‌ (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள்‌, இவை அனைத்தும்‌ வழங்கப்படும்‌.
  • கட்டணமில்லா பேருந்து வசதியும் உண்டு.

வேலைவாய்ப்பு எப்படி?

கடந்த ஆண்டுகளில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில்‌ 80% பேர்‌ பல முன்னணி தொழில்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்‌. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்‌ 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில்‌ தொழிற்பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஏதேனும்‌ ஐயம்‌ ஏற்பட்டால், கீழ்க்காணும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

தொடர்புக்கு அலைபேசி எண்‌: ‌ 9499055642

whatsapp எண்‌: 9499055618

 இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget