குடிமைப் பணித் தேர்வு எழுதும் தேர்வர்களே! முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் அனுமதி இல்லை!
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் தேர்வு 04.08.2025- 10.08.2025 கணினி வகையான தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் 4 தேர்வு மையங்களில் 2271 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Combined Technical Services Examination
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி மற்றும் செஞ்சி ஆகிய மூன்று வட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) (Combined Technical Services Examination (Non-Interview Posts) 04.08.2025- 10.08.2025 (CBT MODE) கணினி வகையான தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் 4 தேர்வு மையங்களில் 2271 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையம் :
University College of Engineering, Tindivanam.
Sri Rangapoopathi College of Engineering, Gingee.
Mailam Engineering College, Mailam, Tindivanam.
Surya College of Engineering, Vikravandi,
விண்ணப்பதாரர்கள், (CBT) கணினி வழித்தேர்விற்கு (காலை 8.30 - 12.30) மற்றும் (மாலை 2.30-5.30) மணி வரை தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். CBT தேர்விற்கு காலை 8.30 மணிக்கு மேலும், மாலை 01.30 மணிக்கு மேலும் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னரும், மாலை 05.30 மணிக்கு முன்னரும் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வருகைபுரிய வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதார்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை/ கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம்/ நிரந்தர கணக்கு எர் (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கைகடிகாரம் (Electronic Watches) புளூடூத் (Bluethooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்களை (Simple Analogue Watches ) பயன்படுத்தலாம்.
ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில், குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து விண்ணப்பதாரர் விலக்கி வைக்கப்படுவர்.
தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் சம்மந்தப்பட்ட வட்ட தலைநகரத்தின் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















